

வரதராஜன்பேட்டையில் பழமை வாய்ந்த தூய அலங்கார அன்னை ஆலயம் உள்ளது. இந்த ஆலயத்தின் முதல் பங்கு தந்தை யாக வீரமாமுனிவர் இருந்தார்.
பல்வேறு சிறப்புகளை பெற்ற இந்த ஆலயத்தை புதுப்பிக்க பங்குதந்தையர்கள் வின்சென்ட் ரோச் மாணிக்கம், ஜோமிக்ஸ் சாவியோ, அருள் பிலவேந்திரன் மற்றும் ஊர் நாட்டார்கள், கிராம பொதுமக்கள் ஆகியோர் முடிவெடுத்து, ரூ.2.50 கோடி மதிப்பில் அதற்கான பணிகள் மேற்கொள்ளப்பட்டன.
இதில், கலைநயமிக்க அழகிய பீடம், பீடத்தின் கீழ் இயேசுவின் இரவு உணவு முப்பரிமாண சொரூபங்கள், 63 அடி உயரத்தில் கருங்கல்லால் கொடி மரம், தேக்கு மரத்தினாலான தூண்கள், புதிய நற்கருணை ஆலயம், புதிய ஒளி, ஒலி அமைப்பு உள்ளிட்டவை அமைக்கப்பட்டுள்ளன.
இதையடுத்து இதன் நேர்ந்தளிப்பு விழா நேற்று முன்தினம் நடைபெற்றது. இதை யொட்டி, நேற்று முன்தினம் மாலை 6 மணியளவில் குடந்தை மறை மாவட்ட ஆயர் அந்தோனிசாமி, பாண்டி-கடலூர் உயர் மறை மாவட்ட முன்னாள் பேராயர் அந் தோனி ஆனந்தராயர், குடந்தை மற்றும் கோட்டாறு மறை மாவட்ட முன்னாள் பேராயர் பீட்டர் ரெமி ஜியூஸ், ஜெயங்கொண்டம் வட் டார முதன்மை குரு ரோச் அலெக்சாண்டர் உட்பட100-க்கும் மேற் பட்டோர் இணைந்து சிறப்புத் திருப்பலி நிகழ்த்தினர். மேலும், ஆலயப்பணியை மேற்கொண்ட கட்டிடக் கலைஞர்களை, பாராட்டி வாழ்த்து தெரிவித்தனர்.
இந்த விழாவில் வரதராஜன் பேட்டை, தென்னூர், தத்தூர், ஆண்டிமடம் மற்றும் சுற்றுவட்டார பொதுமக்கள் கலந்துகொண்டனர்.