

தஞ்சாவூர் மாவட்டத்தில் மாற்றுத் திறனாளிகளின் 100 சதவீத வாக்குப்பதிவை வலியுறுத்தி இருசக்கர வாகன விழிப்புணர்வு பேரணி தஞ்சாவூரில் நேற்று நடைபெற்றது.
தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் மாற்றுத்திறனாளிகள் 100 சதவீதம் தங்களின் வாக்கு ரிமையை செலுத்த வேண்டும் என வலியுறுத்தி, மாற்றுத்திறனாளிகள் பங்கேற்ற இணைப்பு சக்கரம் பொருத்தப்பட்ட இருசக்கர வாகன விழிப்புணர்வு பேரணி தஞ்சா வூரில் நேற்று நடைபெற்றது. தஞ்சாவூர் ரயிலடியிலிருந்து புறப் பட்ட பேரணியை ஆட்சியர் ம.கோவிந்தராவ் கொடியசைத்து தொடங்கிவைத்தார்.
முன்னதாக, மாற்றுத்திறனாளி கள் 100 சதவீதம் வாக்குரிமை செலுத்த வேண்டும் என வலியுறுத்தும் கையெழுத்து இயக் கத்தை தொடங்கி வைத்து, மாற்றுத்திறனாளிகளிடம் ஆட்சியர் பேசியபோது, “அனைத்து வாக்குச்சாவடி களிலும் மாற்றுத்திறனாளிகள் வாக்களிக்க ஏதுவாக சாய்வு தள வசதி, சக்கர நாற்காலிகள், பிரெய்லி மாதிரி வாக்குச் சீட்டு உள்ளிட்டவை ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. எனவே, அனைத்து மாற்றுத்திறனாளிகளும் உங்களின் ஜன நாயக கடமையை நேர்மையாக நிறைவேற்ற வேண்டும்” என்றார்.
அண்ணா சிலை, பெரிய கோயில், மேம்பாலம் வழியாக சத்யா விளையாட்டு மைதானம் வரை நடைபெற்ற இப்பேரணியில் 50-க்கும் மேற்பட்ட மாற்றுத்திறனாளிகள், தாங்கள் பயன்படுத்தும் இணைப்புச் சக்கரம் பொருத்தப்பட்ட இருசக்கர வாகனங்களு டன் வந்து கலந்துகொண்டனர். தொடக்க நிகழ்ச்சியில், மாநக ராட்சி ஆணையர் ஜானகி ரவீந்தி ரன், டிஎஸ்பி பாரதிராஜன், மகளிர் திட்ட அலுவலர் கதிரேசன், மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் சாமிநாதன், மாவட்ட விளையாட்டு அலுவலர் ஆண்டனி ஆகியோர் கலந்துகொண்டனர்.