

ஒரத்தநாடு அரசு கால்நடை அறிவியல் கல்லூரியில், ஏற் கெனவே ஒரு மாணவர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருந்த நிலையில், மேலும் 20 மாணவர்களுக்கு நேற்று புதிதாக கரோனா தொற்று உறுதியானது.
தஞ்சாவூர் மாவட்டத்தில் இதுவரை 14 பள்ளிகள், 4 கல்லூரிகளில் கரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. இது தொடர்பாக, தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் ம.கோவிந்தராவ், செய்தியாளர்களிடம் நேற்று கூறியது:
தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள பள்ளி, கல்லூரிகளில் கடந்த 2 வாரங்களாக கரோனா தொற்று பரவி வருகிறது. இதையடுத்து, கரோனா தொற்று பாதிப்பு கண்டறியப்பட்ட பள்ளி, கல்லூரிகளில் உள்ள மாண வர்கள், ஆசிரியர்கள், அலுவலக ஊழியர்கள் என அனைவருக்கும் கரோனா பரிசோதனை செய்யப் பட்டு வருகிறது.
இந்நிலையில், கடந்த 2 நாட் களுக்கு முன் ஒரத்தநாடு கால்நடை கல்லூரியில் ஒரு மாணவருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. அதன் அடிப்படையில், அங்கு பயிலும் மா ணவர்கள் உட்பட 430 பேருக்கு கடந்த 23-ம் தேதி கரோனா பரி சோதனை செய்யப்பட்டது. அதன் முடிவுகள் நேற்று வெளியானதில், மேலும் 20 மாணவர் களுக்கு கரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. இதைய டுத்து, கல்லூரி மூடப்பட்டுள்ளது.
மாவட்டத்தில் இதுவரை கரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட மாணவர்களின் எண்ணிக்கை 225 ஆக உயர்ந்துள்ளது. இவர்களில் 110 மாணவர்கள் குணமடைந்து வீடு திரும்பிவிட்ட நிலையில், மீதியுள்ளோர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதற்கிடையே, 9, 10, பிளஸ் 1 வகுப்புகளுக்கும், கல்லூரி களுக்கும் அரசு விடுமுறை அறிவித்துள்ளதால், மாவட்டத்தில் தற்போது கரோனா பரவல் குறைந்து வருகிறது என்றார்.