

திருச்சி கே.கே நகரைச் சேர்ந்தவர் செல்வராஜ்(62). இவரது மனைவி சத்தியவாணி(58). இவர்களின் பேரன் சூரியபிரகாஷ். இவர்கள் 3 பேரும் புதுக்கோட்டை மாவட் டம் அறந்தாங்கியில் உள்ள உறவினர் வீட்டு நிகழ்ச்சிக்கு நேற்று சென்றுவிட்டு, திருச்சி நோக்கி காரில் திரும்பிக் கொண்டிருந்தனர்.
நார்த்தாமலை அருகே நெடுஞ்சேரி பகுதியில் சென்றபோது, இவர்களின் கார் மீது எதிரே கல் ஏற்றி வந்த லாரி மோதியது. இதில், செல்வராஜ், சத்தியவாணி ஆகியோர் அந்த இடத்திலேயே உயிரிழந்தனர். காயம் அடைந்த சூரியபிரகாஷ் புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இது குறித்து வெள்ளனூர் போலீஸார் விசாரித்து வருகின்றனர்.