

கிருஷ்ணகிரியில் இன்று (24-ம் தேதி) துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் பிரச்சாரம் மேற்கொள்கிறார்.
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் அதிமுக சார்பில் ஊத்தங்கரை (தனி) தமிழ்செல்வம், பர்கூர் கிருஷ்ணன், கிருஷ்ணகிரி அசோக்குமார், வேப்பனப்பள்ளி கே.பி.முனுசாமி, ஓசூர் ஜோதி பாலகிருஷ்ணா ரெட்டி, தளியில் கூட்டணி கட்சியான பாஜக சார்பில் நாகேஷ்குமார் ஆகியோர் போட்டியிடுகின்றனர். அதிமுக மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் இன்று (24-ம் தேதி) மாலை 6 மணியளவில் கிருஷ்ணகிரியில் பிரச்சாரம் மேற்கொள்கிறார். கிருஷ்ணகிரி 5 ரோடு ரவுண்டானாவில் ஒரே மேடையில் 6 வேட்பாளர்களை ஆதரித்து துணை முதல்வர் பேசுகிறார்.