சூளகிரி வனப்பகுதியில் நாட்டுத் துப்பாக்கி மீட்பு :

சூளகிரி வனப்பகுதியில் நாட்டுத் துப்பாக்கி மீட்பு :
Updated on
1 min read

சூளகிரி வனப்பகுதியில் வீசப்பட்டிருந்த நாட்டுத் துப்பாக்கியை வனத்துறை யினர் கைப்பற்றினர்.

கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரி வனவர் தவமுருகன் மற்றும் வனஊழியர்கள், குரியனப் பள்ளி வனப்பகுதியில் உள்ள நெருப்புக்குட்டை பகுதியில் ரோந்து சென்றனர்.

அப்போது நாட்டுத் துப் பாக்கி வீசப்பட்டிருப்பதை கண்டனர். இதனை கைப்பற்றிய வனத்துறையினர், சூளகிரி காவல் நிலையத்தில் ஒப்படைத் தனர். இதுதொடர்பாக போலீஸார், வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in