Published : 23 Mar 2021 03:14 AM
Last Updated : 23 Mar 2021 03:14 AM

ஏப்ரல் 3-ம் தேதி முதல் கோவை வழியாக - சென்னை, திருவனந்தபுரம், மங்களூரு, புதுச்சேரிக்கு சிறப்பு ரயில்கள் இயக்கம் :

கோவை

சேலம் கோட்ட ரயில்வே அலுவலகம் வெளியிட்ட செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:

திருவனந்தபுரத்தில் இருந்து ஏப்ரல் 3-ம் தேதி முதல் சனிக்கிழமைதோறும் இரவு 7.15 மணிக்கு புறப்படும் வாராந்திர அதிவிரைவு சிறப்பு ரயில் (எண்:02698), மறுநாள் காலை 10.25 மணிக்கு சென்னை சென்ட்ரல் ரயில்நிலையம் சென்றடையும். ஏப்ரல் 4-ம் தேதி முதல் ஞாயிறுதோறும் சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்திலிருந்து மதியம் 3.10 மணிக்கு புறப்படும் அதிவிரைவுரயில் (எண்:02697), மறுநாள் காலை 6.50 மணிக்கு திருவனந்தபுரம் சென்றடையும். இந்த ரயில்கள் எர்ணாகுளம், திருச்சூர், பாலக்காடு, போத்தனூர், ஈரோடு, சேலம் உள்ளிட்ட ரயில்நிலையங்களில் நின்று செல்லும்.

மங்களூர் சென்ட்ரலில் இருந்து ஏப்ரல் 8-ம் தேதி முதல் தினமும் இரவு 11.45 மணிக்கு புறப்படும் அதிவிரைவு சிறப்பு ரயில் (எண்:06628), மறுநாள் மதியம் 3.50 மணிக்கு சென்னை சென்ட்ரல் ரயில்நிலையம் சென்றடையும். சென்னை சென்ட்ரலில் இருந்து ஏப்ரல் 9-ம் தேதி முதல் தினமும் காலை 11.35 மணிக்கு புறப்படும் ரயில் (எண்:06627), மறுநாள் அதிகாலை 3.25 மணிக்கு மங்களூரு சென்றடையும். இந்த ரயில் கண்ணுார், கோழிக்கோடு, பாலக்காடு, போத்தனுார், கோவை, திருப்பூர் உள்ளிட்ட ரயில் நிலையங்களில் நின்று செல்லும்.

புதுச்சேரியில் இருந்து ஏப்ரல் 17-ம் தேதி முதல் சனிக்கிழமைதோறும் மாலை 4.45 மணிக்கு புறப்படும் வாராந்திர சிறப்பு ரயில் (எண்:06857), மறுநாள் காலை 9.50 மணிக்கு மங்களூரு சென்ட்ரல் சென்றடையும். மங்களூரு சென்ட்ரல் ரயில் நிலையத்திலிருந்து ஏப்ரல் 18-ம் தேதி முதல் ஞாயிறுதோறும் மாலை 4.35 மணிக்கு புறப்படும் ரயில் (எண்:06858) மறுநாள் காலை 9.50 மணிக்கு புதுச்சேரி சென்றடையும். இந்த ரயில் விழுப்புரம், விருத்தாசலம், திருச்சி, கரூர், ஈரோடு, திருப்பூர், கோவை உள்ளிட்ட ரயில்நிலையங்களில் நின்று செல்லும். எர்ணாகுளத்தில் இருந்து ஏப்ரல் 5-ம் தேதி முதல் திங்கள் மற்றும் புதன்கிழமைதோறும் மாலை 4.50 மணிக்கு புறப்படும் ரயில் (எண்:06129), மறுநாள் காலை 4மணிக்கு பனஸ்வாடி சென்றடையும். பனஸ்வாடியில் இருந்து ஏப்ரல் 6-ம் தேதி முதல் செவ்வாய் மற்றும் வியாழக்கிழமைதோறும் இரவு 7 மணிக்கு புறப்படும் ரயில் (எண்:06130), மறுநாள் காலை 6 மணிக்கு எர்ணாகுளம் சென்றடையும். இந்த ரயில் பாலக்காடு, போத்தனுார், திருப்பூர் உள்ளிட்ட ரயில் நிலையங்களில் நின்று செல்லும்.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x