Published : 23 Mar 2021 03:14 AM
Last Updated : 23 Mar 2021 03:14 AM

ஈரோட்டில் 8 தொகுதிகளில் 128 வேட்பாளர்கள் : பவானிசாகர் தொகுதியில் 6 பேர் மட்டுமே போட்டி

ஈரோடு மாவட்டத்தில் உள்ள 8 சட்டப்பேரவைத் தொகுதிகளில், 128 வேட்பாளர்கள் போட்டியிடு கின்றனர்.

ஈரோடு கிழக்கு சட்டப்பேரவைத் தொகுதியில், திருமகன் ஈவெரா (காங்கிரஸ்), மு.யுவராஜா (அதிமுக), செ.கோவிந்தராஜ் (பகுஜன் சமாஜ்), ச.கோமதி (நாம் தமிழர்), சா.ஆ.முத்துக்குமரன் (அமமுக), ஏஎம்ஆர் ராஜா குமார் (மக்கள் நீதி மய்யம்) உட்பட14 வேட்பாளர்கள் போட்டியிடு கின்றனர்.

ஈரோடு மேற்கு தொகுதியில் கே.வி.ராமலிங்கம் (அதிமுக), சு.முத்துசாமி (திமுக), அ.தனலட்சுமி (பகுஜன் சமாஜ் கட்சி), ப.சந்திரகுமார் (நாம் தமிழர் கட்சி), எஸ்.சிவசுப்பிரமணியன் (அமமுக), துரை சேவுகன்(மக்கள் நீதி மய்யம்) உள்ளிட்ட 15 வேட்பாளர்கள் போட்டியிடு கின்றனர்.

பெருந்துறை தொகுதியில், எஸ்.ஜெயக்குமார் (அதிமுக), கேகேசி பாலு (திமுக), குழந்தைவேல் (தேமுதிக), எம்.தம்பி (பகுஜன் சமாஜ் கட்சி), லோக நாதன் (நாம் தமிழர் கட்சி), நந்தகுமார் (மக்கள் நீதிமய்யம்) மற்றும் சுயேச்சையாகப் போட்டியிடும் தற்போதைய எம்.எல்.ஏ. தோப்பு வெங்கடாசலம் உட்பட 25 வேட்பாளர்கள் போட்டி யிடுகின்றனர்.

பவானிசாகர் தொகுதியில், பி.எல்.சுந்தரம் (இந்திய கம்யூனிஸ்ட் கட்சி), ஏ.பண்ணாரி (அதிமுக), ஜி.ரமேஷ் (தேமுதிக), கா.கார்த்திக்குமார் (மக்கள் நீதி மய்யம்), வெ.சங்கீதா (நாம் தமிழர் கட்சி) உள்ளிட்ட ஆறு பேர் போட்டியிடுகின்றனர்.இந்த தொகுதியில் சுயேச்சை வேட்பாளர்கள் யாரும் போட்டியிட வில்லை.

மொடக்குறிச்சி தொகுதியில் சி.சரஸ்வதி (பாஜக), சுப்புலட்சுமி ஜெகதீசன் (திமுக), பூபதி (பகுஜன்சமாஜ்), டி.தங்கராஜ் (அமமுக), கோ.பிரகாஷ் (நாம் தமிழர் கட்சி), ம.ராஜேஷ்குமார்(மக்கள் நீதி மய்யம்) உள்ளிட்ட 15 வேட்பாளர்கள் போட்டியிடு கின்றனர்.

கோபி தொகுதியில் கே.ஏ.செங்கோட்டையன் (அதிமுக), ஜி.வி.மணிமாறன் (திமுக), பி.பழனிசாமி (பகுஜன் சமாஜ்), மா.கி.சீதாலட்சுமி (நாம் தமிழர்), நா.க.துளசிமணி (அமமுக), என்.கே.பிரகாஷ் (மக்கள் நீதி மய்யம்) உள்ளிட்ட 19 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர்.

அந்தியூர் தொகுதியில் கே.எஸ்.சண்முகவேல் (அதிமுக), ஏ.ஜி. வெங்கடாசலம் (திமுக), மு.குருநாதன் (மக்கள் நீதி மய்யம்), மா.சரவணன் (நாம் தமிழர் கட்சி), எஸ்.ஆர்.செல்வம் (அமமுக) உள்ளிட்ட 20 பேரும்,பவானி தொகுதியில் கே.சி.கருப்பணன் (அதிமுக), கே.பி.துரைராஜ் (திமுக), எம்.கோபால் (பகுஜன் சமாஜ்), கி.சதானந்தம் (மக்கள் நீதி மய்யம்), மு.சத்யா (நாம் தமிழர்), மு.ராதாகிருஷ்ணன் (அமமுக) உள்ளிட்ட 14 பேரும் போட்டியிடுகின்றனர்.

ஈரோடு மாவட்டத்தில் குறைந்த பட்சமாக பவானிசாகர் தொகுதியில் 6 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x