Published : 23 Mar 2021 03:15 AM
Last Updated : 23 Mar 2021 03:15 AM

திருவண்ணாமலை மாவட்டத்தில் - 8 சட்டப்பேரவை தொகுதிகளில் 122 வேட்பாளர்கள் : 23 பேர் வேட்பு மனுவை திரும்ப பெற்றனர்

திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள 8 சட்டப்பேரவைத் தொகுதி களில் 122 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர்.

தி.மலை மாவட்டத்தில் 8 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கு வேட்பு மனு தாக்கல் கடந்த 12-ம் தேதி தொடங்கி 19-ம் தேதி முடிந்தது. அரசியல் கட்சிகளை சேர்ந்தவர்கள் மற்றும் சுயேட்சைகள் என 187 பேர் வேட்பு மனு தாக்கல் செய்தனர். வேட்பு மனுக்கள் மீதான பரிசீலனை கடந்த 20-ம் தேதி நடைபெற்றது. அதில், 145 பேரது வேட்பு மனுக்கள் ஏற்கப்பட்டன. பின்னர், வேட்பு மனுக்களை திரும்பப்பெற நேற்று பிற்பகல் 3 மணி வரை கால அவகாசம் அளிக்கப்பட்டது. அதில், 23 பேர் வேட்பு மனுக்களை திரும்பப் பெற்றனர். இதையடுத்து, 122 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். இதையடுத்து, சுயேட்சை களுக்கு சின்னம் ஒதுக்கீடு செய்யப்பட்டது.

வந்தவாசி(தனி)

வந்தவாசி (தனி) தொகுதியில் 13 பேரது வேட்பு மனுக்கள் ஏற்கப்பட்டன. அதில் 2 பேர், வேட்பு மனுவை திரும்பப்பெற்றுக் கொண் டனர். இதையடுத்து, அம்பேத் குமார்(திமுக), அர்ஜுனன்(பகுஜன் சமாஜ் கட்சி), சுரேஷ்(மக்கள் நீதி மய்யம், துரை (இந்திய கண சங்கம்), பிரபாவதி(நாம் தமிழர் கட்சி), முரளி(பாமக), வெங்கடேசன் (அமமுக) மற்றும் சுயேட்சைகள் மணிகண்டன், முத்துபெருமாள், முரளி, விக்னேஷ் ஆகிய 11 பேர் களத்தில் உள்ளனர்.

ஆரணி

ஆரணி தொகுதியில் 20 பேரது வேட்பு மனுக்கள் ஏற்கப்பட்டன. அதில், 5 பேர் வேட்பு மனுக்களை திரும்பப்பெற்றனர். இதையடுத்து எஸ்.எஸ்.அன்பழகன்(திமுக), அன்பு(பகுஜன் சமாஜ் கட்சி), பாஸ்கரன்(தேமுதிக), எஸ்.ராமச் சந்திரன்(அதிமுக), தணிகை வேல் (வீரத்தியாகி விஸ்வநாததாஸ் தொழிலாளர்கள் கட்சி), பிரகலதா(நாம் தமிழர் கட்சி), மணிகண்டன் (மக்கள் நீதி மய்யம்) மற்றும் சுயேட்சைகள் அருண்குமார், கொ.அன்பழகன், ம.அன்பழகன், கார்த்திகேயன், சக்திவேல், தட்சணாமூர்த்தி, முரளி, ச.ராமச்சந்திரன் ஆகிய 15 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர்.

செய்யாறு

செய்யாறு தொகுதியில் 16 பேரது வேட்பு மனுக்கள் ஏற்கப்பட்டன. அதில் ஒருவர், தனது வேட்பு மனுவை திரும்பப் பெற்றுள்ளார். இதையடுத்து, மோகன்(அதிமுக), விஜயகாந்த்(பகுஜன் சமாஜ் கட்சி), ஜோதி (திமுக), குட்டிமணி(வீரத்தியாகி விஸ்வநாததாஸ் தொழிலாளர்கள் கட்சி), நடராஜன் (புதிய தலைமுறை மக்கள் கட்சி), பீமன்(நாம் தமிழர் கட்சி), மணிகண்டன் (இந்திய கணசங்கம் கட்சி), மயில்வாகனன் (மக்கள் நீதி மய்யம்), மேரிவைலட்(தேசிய சிறுபான்மையினர் மக்கள் இயக்கம்), வரதராஜன்(அமமுக), வெங்கடேசன்(அனைத்திந்திய சமுதாய முன்னேற்ற கழகம்) மற்றும் சுயேட்சைகள் ஆனந்த சேகரன், உதயகுமார், சுரேஷ்பாபு, நிர்மலா ஆகிய 15 பேர் களத்தில் உள்ளனர்.

போளூர்

போளூர் தொகுதியில் 19 பேரது வேட்பு மனுக்கள் ஏற்கப்பட்டன. அதில், 4 பேர் தங்களது வேட்பு மனுக்களை திரும்பப் பெற்றுள்ளனர். இதையடுத்து, எழில் அரசு (பகுஜன் சமாஜ் கட்சி), அக்ரி கிருஷ்ணமூர்த்தி(அதிமுக), கே.வி. சேகரன்(திமுக), கலாவதி (மக்கள் நீதி மய்யம்), லாவண்யா (நாம் தமிழர் கட்சி), விஜயகுமார் (அமமுக) மற்றும் சுயேட்சைகள் கணேசன், கலைமணி, கு.கிருஷ்ண மூர்த்தி, சண்முகசுந்தரம், சத்திய ராஜ், சிதம்பரம், சிவா, தட்சிணா மூர்த்தி, முருகேசன் ஆகிய 15 பேர் களத்தில் உள்ளனர்.

செங்கம்(தனி)

செங்கம் (தனி) தொகுதியில் 17 பேரது வேட்பு மனுக்கள் ஏற்கப்பட்டன. அதில் 2 பேர், தங்களது வேட்பு மனுக்களை திரும்பப்பெற்றனர். இதையடுத்து, அன்பு(தேமுதிக), கிரி(திமுக), சண்முகம்(பகுஜன் சமாஜ் கட்சி), நைனாக்கண்ணு(அதிமுக), அன்பழகன் (பாரதிய டாக்டர் அம்பேத்கர் ஜனதா கட்சி), சிவபிரகாஷ் (வேதா பேரவை), சுகன்ராஜ் (இந்திய ஜனநாயக கட்சி), செல்வராஜி(மக்கள் தேசம் கட்சி), பாஸ்கர்(நியு ஜெனரேஷன் பீப்புள்ஸ் பார்ட்டி), வெண்ணிலா (நாம் தமிழர் கட்சி) மற்றும் சுயேட்சைகள் அருண்குமார், சர்மா, சிவக்குமார், தினகரன், விஜயசந்திரன் ஆகிய 15 பேர் களத்தில் உள்ளனர்.

திருவண்ணாமலை

தி.மலை தொகுதியில் 19 பேரது வேட்பு மனுக்கள் ஏற்கப்பட்டன. அதில், 4 பேர் தங்களது வேட்பு மனுக்களை திரும்பப் பெற்றுள்ளனர். இதையடுத்து, கோதண்டபாணி(பகுஜன் சமாஜ் கட்சி), தணிகைவேல்(பாஜக), எ.வ.வேலு (திமுக), செல்வராசு (நாடாளும் மக்கள் கட்சி), அருள் (மக்கள் நீதி மய்யம்), கமலக்கண்ணன் (நாம் தமிழர் கட்சி), சந்திரகாந்த் பிள்ளை (நியூ ஜெனரேஷன் பீப்புள்ஸ் பார்ட்டி), செல்வம் (வீரத்தியாகி விஸ்வநாததாஸ் தொழிலாளர்கள் கட்சி), பஞ்சாட்சரம் (அமமுக) மற்றும் சுயேட்சைகள் நக்கீரன், பழனி, மணிமாறன், வாசுதேவன், விநாயகம், ஜமீல்பாஷா ஆகிய 15 பேர் களத்தில் உள்ளனர்.

கீழ்பென்னாத்தூர்

கீழ்பென்னாத்தூர் தொகுதியில் 22 பேரது வேட்பு மனுக்கள் ஏற்கப்பட்டன. அதில் ஒருவர், தனது வேட்பு மனுவை திரும்பப் பெற்றுள்ளார். இதையடுத்து, சுபாஷ் சந்திர போஸ் (பகுஜன் சமாஜ் கட்சி), கு.பிச்சாண்டி (திமுக), ஏழுமலை (வீரத் தியாகி விஸ்வநாததாஸ் தொழிலாளர் கட்சி), கார்த்திகேயன் (அமமுக), சுகானந்தம் (மக்கள் நீதி மய்யம்), செல்வகுமார் (பாமக), தங்கராஜ் (மக்கள் முன்னேற்ற பேரவை), ரமேஷ்பாபு (நாம் தமிழர் கட்சி), வெங்கடேசன் (இந்திய குடியரசு கட்சி), ஜெயராமன் (அனைத்து மக்கள் அரசியல் கட்சி) மற்றும் சுயேட்சைகள் அதியமான், கணேஷ்ராஜா, கிருஷ்ணமூர்த்தி, சக்திவேல், சசிகுமார், சம்பத்ராஜ், தினகரன், முருகன், மோகன்ராஜா, லூர்தம்மாள், ஜோதி ஆகிய 21 பேர் களத்தில் உள்ளனர்.

கலசப்பாக்கம்

கலசப்பாக்கம் தொகுதியில் 19 பேரது வேட்பு மனுக்கள் ஏற்கப்பட்டன. அதில் 4 பேர், தங்களது வேட்பு மனுவை திரும்பப் பெற்றுள்ளனர். இதையடுத்து, பெ.சு.தி. சரவணன் (திமுக), நேரு (தேமுதிக), வி.பன்னீர்செல்வம் (அதிமுக), ராஜ்குமார்(பகுஜன் சமாஜ் கட்சி), கல்யாணசுந்தரம் (வீர தியாகி விஸ்வநாதஸ் தொழிலாளர் கட்சி), சம்பத் (அண்ணா திராவிடர் கழகம்), பாலாஜி(நாம் தமிழர் கட்சி), ராஜேந்திரன் (இந்திய ஜனநாயக கட்சி) மற்றும் சுயேட்சைகள் அமுதா, கா.சரவணன், திருநாவுக் கரசு, சு.பன்னீர்செல்வம், வெ.பன்னீர்செல்வம், ராஜாமணி, ஜெகநாதன் ஆகிய 15 பேர் களத்தில் உள்ளனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x