

கிருஷ்ணகிரி வாக்கு எண்ணும் மையத்தில், தேர்தல் பார்வையாளர்கள் ஆய்வு மேற்கொண்டனர்.
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் ஊத்தங்கரை (தனி), பர்கூர், கிருஷ்ணகிரி, வேப்பனப்பள்ளி, ஓசூர், தளி சட்டப்பேரவை தொகுதிகளில் பதிவாகும் வாக்குகளை எண்ண, கிருஷ்ணகிரி அரசு பாலிடெக்னிக் மையத்தில் வாக்கு எண்ணும் மையம் அமைக்கப்பட்டுள்ளது. தேர்தல் பொது பார்வையாளர்களான, ஊத்தங்கரை, பர்கூர் தொகுதி பால்சனா, கிருஷ்ணகிரி, வேப்பனப்பள்ளி பார்த்தசாரதி சென்ஷர்மா, ஓசூர், தளி ஹன்ஸ்ராஜ் சுஹான், காவல்துறை பார்வையாளர் சுனில் பாஸ்கர், மாவட்ட தேர்தல் அலுவலரும் ஆட்சியருமான ஜெய சந்திர பானு ரெட்டி ஆகியோர் நேற்று வாக்கு எண்ணும் மையத்தில் ஆய்வு மேற்கொண்டனர்.
அப்போது, வாக்கு எண்ணும் மையத்தில் குடிநீர், மின்சாரம், கழிப்பறை போன்ற அடிப்படை வசதிகள் குறித்தும், வாக்குப்பதிவு இயந்திரங்கள் இருப்பறை, வாகனங்கள் நிறுத்தும் இடம், வாக்குச்சாவடி முகவர்கள் அறை, ஊடக மையம் மற்றும் மாவட்ட தேர்தல் அலுவலர் அலுவலகம் ஆகியவற்றை ஆய்வு மேற்கொண்டனர். இந்நிகழ்வில், மாவட்ட வருவாய் அலுவலர் சதீஷ், மாவட்ட தொழில் மைய பொது மேலாளர் பிரசன்னபாலமுருகன், தேர்தல் வட்டாட்சியர் ஜெய்சங்கர் உட்பட பலர் உடனிருந்தனர்.