

கிருஷ்ணகிரி அணையின் நீர்மட்டம் 43.85 அடியாக சரிந்துள்ளது.
கிருஷ்ணகிரி மாவட்டம் கெலவரப்பள்ளி அணையில் இருந்து திறந்துவிடப்படும் நீரின் அளவைப் பொறுத்து, கிருஷ்ணகிரி அணைக்கு நீர்வரத்து இருக்கும். இந்த தண்ணீர் தென்பெண்ணை ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள 11 சிறு தடுப்பணைகளைக் கடந்து, கிருஷ்ணகிரி அணைக்கு வருகிறது. கிருஷ்ணகிரி அணைக்கு கடந்த 20 நாட்களாக தண்ணீர் வரத்து முற்றிலும் நின்றுவிட்டது. அணையில் இருந்து வலது மற்றும் இடதுபுறக் கால்வாய் வழியாக விநாடிக்கு149 கனஅடி தண்ணீர் திறந்துவிடப்படுகிறது. இதனால் அணையின் நீர்மட்டம் தினசரி 0.15 அடி குறைந்து வருகிறது. அணையின் மொத்த கொள்ளளவான 52 அடியில் 43.85 அடிக்கு தண்ணீர் உள்ளது.