

தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்றச் சங்கம் சார்பில் கிருஷ்ணகிரி மாவட்ட தேர்தல் அலுவலரான ஆட்சியர் ஜெயசந்திரபானு ரெட்டிக்கு கோரிக்கை மனு ஒன்றை அனுப்பி உள்ளனர். அதில் கூறப்பட்டுள்ளதாவது:
தேர்தல் பணியில் ஈடுபடும் அனைத்து ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்களும் வாக்களிக்க ஏதுவாக அனைவருக்கும் சரியான நேரத்தில் தபால் வாக்கு வழங்கப்படுவதை உறுதிப்படுத்த வேண்டுகிறோம்.
சட்டப்பேரவைத் தொகுதி வாரியாக தேர்தல் பணியில் ஈடுபடும் அனைத்து ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்களின் விவர பதிவேட்டை ஏற்படுத்தி அப்பதிவேட்டில் தேர்தல் பணியாளர்களின் பெயர், படிவம் 12பி வழங்கப்பட்ட விவரம், தபால் வாக்கு வழங்கப்பட்ட விவரம், தபால் வாக்கு திரும்ப பெறப்பட்ட விவரம் ஆகியவற்றை பதிவு செய்ய வேண்டும். ஒவ்வொரு தேர்தலிலும் தேர்தல் பணியில் ஈடுபடும் ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்கள் 100 சதவீதம் முழுமையாக வாக்களிக்க முடிவதில்லை. இந்த தேர்தலில் 100 சதவீதம் வாக்களிக்க ஏற்பாடு செய்ய வேண்டும்.