செலவினப் பார்வையாளர்கள் ஆலோசனை :

வேட்பாளர்களின் செலவினங்களை கண்காணிக்கும் குழுக்கள் மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்த ஆலோசனைக் கூட்டம் தென்காசி ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்றது.  ஆட்சியர் சமீரன், தேர்தல் செலவினப் பார்வையாளர்கள் கலந்துகொண்டனர்.
வேட்பாளர்களின் செலவினங்களை கண்காணிக்கும் குழுக்கள் மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்த ஆலோசனைக் கூட்டம் தென்காசி ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்றது. ஆட்சியர் சமீரன், தேர்தல் செலவினப் பார்வையாளர்கள் கலந்துகொண்டனர்.
Updated on
1 min read

தென்காசி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தேர்தல் பணிகள் குறித்த ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. ஆட்சியரும் மாவட்ட தேர்தல் அலுவலருமான சமீரன் தலைமை வகித்தார். தேர்தல் பார்வையாளர் ராஜு நாரா யண சுவாமி (பொது), தேர்தல் செலவின பார்வையாளர்கள் சுஜித் குமார், பைஜிநாத் சிங், ரன்விஜய குமார் முன்னிலை வகித்தனர்.

மாநில சிறப்பு செலவின பார்வையாளர் பி.ஆர்.பாலகிருஷ்ணன் பங்கேற்றார்.

ஆட்சியர் பேசும்போது, “தேர்தல் ஆணையத்தால் நிர்ணயம் செய்யப்பட்ட செலவின வரம்புக்குள் வேட்பாளர்கள் தங்களது தேர்தல் செலவினங்களை வைத்துக்கொள்ள வேண்டும். இதை கண்காணிக்க நடவடி க்கை எடுக்கப்பட்டுள்ளது. சங்கரன் கோவில் தொகுதிக்கு சுஜித்குமார் வத்ஸவா, வாசுதேவநல்லூர், கடையநல்லூர் தொகுதிகளுக்கு பைஜிநாத்சிங், தென்காசி, ஆலங்குளம் தொகுதிகளுக்கு ரன்விஜயகுமார் ஆகியோர் செலவினப் பார்வையாளர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர். வேட்பாளர்கள் சம்பந்தப்பட்ட அலுவலர்களிடம் முன் அனுமதி பெற்று பொதுக்கூட்டம், பிரச்சாரம், வாகன விளம்பரம், துண்டு பிரசுரம் விநியோகம் போன்றவற்றை கரோனா கட்டுப்பாட்டு வழிகாட்டுதல்களை கடைபிடித்து மேற்கொள்ள வேண்டும்” என்றார்.

தென்காசி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுகுணாசிங், மாவட்ட வருவாய் அலுவலர் ஜனனி சவுந்தர்யா உட்பட பலர் கலந்துகொண்டனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in