கிருஷ்ணகிரி மாவட்டத்தில் - 80 வயதுக்கு மேற்பட்டோர், மாற்றுத்திறனாளிகள் 3036 பேர் தபால் வாக்களிக்க விருப்பம் :

கிருஷ்ணகிரி மாவட்டத்தில்  -  80 வயதுக்கு மேற்பட்டோர், மாற்றுத்திறனாளிகள் 3036 பேர் தபால் வாக்களிக்க விருப்பம் :
Updated on
1 min read

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 6 சட்டப்பேரவைத் தொகுதிகளில் 80 வயதுக்கு மேற்பட்டவர்கள், மாற்றுத்திறனாளிகள் 3036 பேரிடம், தபால் வாக்களிக்க படிவம் 12டி பெறப்பட்டுள்ளது.

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் ஊத்தங்கரை (தனி), பர்கூர், கிருஷ்ணகிரி, வேப்பனப்பள்ளி, ஓசூர், தளி ஆகிய 6 சட்டப்பேரவைத் தொகுதிகளில் ஏப்ரல் 6-ம் தேதி தேர்தல் நடைபெறுகிறது. தேர்தலின் போது வாக்குச்சாவடிக்கு சென்று வாக்களிக்க முடியாத 80 வயதுக்கு மேற்பட்டவர்கள், மாற்றுத் திறனாளிகள், கரோனா நோய் தொற்றால் பாதிக்கப்பட்ட மற்றும் பாதிப்பு உள்ளதாக சந்தேகப்படும் வாக்காளர்கள் தங்களது வாக்குகளை விருப்பத்தின் அடிப்படையில் தபால் மூலம் செலுத்தலாம் எனவும், இது கட்டாயமில்லை எனவும் மாவட்ட தேர்தல் அலுவலரும், ஆட்சியருமான ஜெயசந்திர பானு ரெட்டி தெரிவித்திருந்தார்.

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 6 தொகுதிகளிலும் 13 ஆயிரத்து 723 மாற்றுத் திறனாளி வாக்காளர்கள், 80 வயதுக்கு மேற்பட்ட 28 ஆயிரத்து 543 வாக்காளர்கள் என மொத்தம் 42 ஆயிரத்து 266 வாக்காளர்கள் உள்ளனர். இவர்களுக்கு தபால் வாக்குகள் அளிக்க படிவம் 12டி வழங்கும் பணிகளில் வாக்குச்சாவடி அலுவலர்கள் ஈடுபட்டனர்.

இதில், 6 தொகுதிகளிலும் 80 வயதுக்கு மேற்பட்ட மூத்த குடிமக்கள் 2332 பேர், மாற்றுத் திறனாளிகள் 704 பேர் என மொத்தம் 3036 பேர் தபால் வாக்களிக்க விருப்பம் தெரிவித்து படிவம் 12டி-ஐ அதிகாரிகள் பெற்றுள்ளனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in