தி.மலை ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் - வாக்கு எண்ணும் மையம் அமைக்கும் பணி தீவிரம் :

திருவண்ணாமலை ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் வாக்கு எண்ணும்  மையம் அமைப்பதற்கான பணி முழுவீச்சில் நடைபெறுகிறது.
திருவண்ணாமலை ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் வாக்கு எண்ணும் மையம் அமைப்பதற்கான பணி முழுவீச்சில் நடைபெறுகிறது.
Updated on
1 min read

தி.மலை ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் வாக்கு எண்ணும் மையம் அமைப்பதற்கான பணி முழுவீச்சில் நடைபெற்று வருகிறது.

தி.மலை மாவட்டத்தில் 8 சட்டப்பேரவைத் தொகுதிகள் உள்ளன. இந்த தொகுதிகளில் வரும் ஏப்ரல் 6-ம் தேதி பதிவாகும் வாக்குகள் எண்ணுவதற்காக திருவண்ணாமலை மாவட்டத்தில் 2 இடங்கள் தேர்வு செய்யப் பட்டுள்ளன.

தி.மலை, கீழ்பென்னாத்தூர், செங்கம் மற்றும் கலசப்பாக்கம் சட்டப்பேரவைத் தொகுதியில் பதிவாகும் வாக்குகள் தி.மலை ஒழுங்குமுறை விற்பனை கூடத்திலும், ஆரணி, செய்யாறு, வந்தவாசி மற்றும் போளூர் சட்டப்பேரவைத் தொகுதியில் பதிவாகும் வாக்குகள் எண்ணும் பணி ஆரணி அடுத்த தச்சூர் கிராமத்தில் உள்ள அரசு பொறி யியல் கல்லூரியில் எண்ணப்பட உள்ளன.

இதையொட்டி, இரண்டு இடங்களிலும் முன்னேற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. அரசியல் கட்சி முகவர்கள் செல்லும் வழித்தடம் மற்றும் அமரும் பகுதி, பாதுகாப்பு அறையில் இருந்து மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் மற்றும் விவிபாட் இயந்திரங்களை கொண்டு செல்லும் வழித்தடம், தேர்தல் நடத்தும் அலுவலர் மற்றும் வாக்கு எண்ணும் அலுவலர்கள் பணி செய்யும் பகுதி என அனைத்து பணிகளும் முழுவீச்சில் நடைபெறுகிறது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in