Published : 20 Mar 2021 03:15 AM
Last Updated : 20 Mar 2021 03:15 AM

தஞ்சாவூர், திருவாரூர், நாகை, மயிலாடுதுறை மாவட்டங்களில் 441 பேர் வேட்புமனு தாக்கல் :

தஞ்சாவூர், திருவாரூர், நாகை, மயிலாடுதுறை மாவட்டங்களில் மொத்தம் 441 பேர் வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர்.

தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிட வேட்பாளர்கள் வேட்புமனு தாக்கல் செய்வது நேற்றுடன் நிறைவடைந்தது. வேட்புமனு தாக்கலின் கடைசி நாளான நேற்று, தஞ்சாவூர் மாவட்டத்தில் திருவையாறு தொகுதியில் 11 பேரும், பாபநாசம் தொகுதியில் 7 பேரும், தஞ்சாவூர் தொகுதியில் 12 பேரும், திருவிடைமருதூர் தொகுதியில் 3 பேரும், ஒரத்தநாடு தொகுதியில் 8 பேரும், கும்பகோணம் தொகுதியில் 18 பேரும், பேராவூரணி தொகுதியில் 5 பேரும், பட்டுக்கோட்டை தொகுதியில் 11 பேரும் என மொத்தம் 75 பேர் வேட்புமனுக்களை தாக்கல் செய்தனர்.

திருவையாறில் 36, பாபநாசத்தில் 22, தஞ்சாவூரில் 34, திருவிடைமருதூரில் 16, ஒரத்தநாட்டில் 30, கும்பகோணத்தில் 32, பேராவூரணியில் 19, பட்டுக்கோட்டையில் 25 என மாவட்டம் முழுவதும் மொத்தம் 214 பேர் வேட்புமனுக்களை தாக்கல் செய்துள்ளனர்.

திருவாரூர் மாவட்டத்தில்...

திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி (தனி) தொகுதியில் 9 பேர், மன்னார்குடியில் 6 பேர், திருவாரூரில் 10 பேர், நன்னிலத்தில் 12 பேர் நேற்று வேட்புமனு தாக்கல் செய்தனர்.

திருவாரூர் மாவட்டத்தில் உள்ள 4 தொகுதிகளிலும் போட்டியிட மொத்தம் 104 பேர் வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர்.

இதில், அதிகபட்சமாக நன்னிலம் தொகுதியில் போட்டியிட 33 பேர் வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர்.

மன்னார்குடி தொகுதியில் 26 பேரும், திருவாரூர் தொகுதியில் 23 பேரும், திருத்துறைப்பூண்டி (தனி) தொகுதியில் 22 பேரும் வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர்.

நாகை, மயிலாடுதுறையில்...

சீர்காழி தொகுதியில் 10 பேர், மயிலாடுதுறை தொகுதியில் 15 பேர், பூம்புகார் தொகுதியில் 7 பேர், நாகப்பட்டினம் தொகுதியில் திமுக கூட்டணியில் விடுதலை சிறுத்தைகள் கட்சி வேட்பாளர் ஆளூர் ஷாநவாஸ் உட்பட 4 பேர், கீழ்வேளூர் தொகுதியில் அதிமுக கூட்டணியில் பாமக வேட்பாளர் வடிவேல் ராவணன் உட்பட 7 பேர், வேதாரண்யம் தொகுதியில் 9 பேர் என நாகை, மயிலாடுதுறை மாவட்டங்களில் உள்ள 6 சட்டப்பேரவைத் தொகுதிகளில் நேற்று மட்டும் 57 பேர் வேட்புமனு தாக்கல் செய்தனர். இதையடுத்து, மொத்தம் 123 பேர் வேட்பு மனு தாக்கல் செய்துள்ளனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x