Published : 20 Mar 2021 03:15 AM
Last Updated : 20 Mar 2021 03:15 AM

வேலூர், ராணிப்பேட்டை மாவட்டங்களில் - இறுதி நாளில் குவிந்த 114 வேட்பு மனுக்கள் : இன்று மனுக்கள் மீது பரிசீலனை

சட்டப்பேரவைத் தேர்தலில், வேலூர் தொகுதியில் அமமுக வேட்பாளராக போட்டியிட வேலூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் தேர்தல் நடத்தும் அலுவலர் கணேஷிடம் நேற்று வேட்புமனு தாக்கல் செய்த வி.டி.தர்மலிங்கம். படம்: வி.எம்.மணிநாதன்.

வேலூர்/ராணிப்பேட்டை

வேலூர், ராணிப்பட்டை மாவட்டங்களில் இறுதி நாளான நேற்று ஒரே நாளில் 114 பேர் வேட்புமனுத் தாக்கல் செய்தனர்.

தமிழகத்தில் சட்டப்பேரவைத் தேர்தலுக்கான மனுத்தாக்கல் நேற்று பிற்பகல் 3 மணியுடன் முடிவடைந்தது. இதுவரை பெறப்பட்டுள்ள மனுக்கள் மீது இன்று பரிசீலனை செய்யப்பட உள்ளன. வரும் திங்கட்கிழமை மனுக்களை திரும்பப் பெற கடைசி நாள் என்பதால் அன்று இரவுக்குள் இறுதி வேட்பாளர் பட்டியலுடன் வேட்பாளர் களுக்கான சின்னங்களும் ஒதுக்கீடு செய்யப்படும். வேலூர் மாவட்டத்தில் உள்ள 5 சட்டப்பேரவைத் தொகுதிகளில் நேற்று மட்டும் 67 பேர் மனுத்தாக்கல் செய்தனர்.

வேலூர்

அமமுக வேட்பாளர் வி.டி.தர்மலிங்கம், மாற்று வேட்பாளராக ஞானவேல், சுயேட்சையாக விஜயராஜ், தமிழ்நாடு இளைஞர் கட்சி சார்பில் நரேஷ்குமார், சுயேட்சை வேட்பாளர்களாக கார்த்தி, கார்த்திகேயன், சீனிவாசன், சதீஷ்குமார் ஆகியோரும், திப்புசுல்தான் கட்சி சார்பில் சையத் ஜலாலுதீன், நாம் தமிழர் கட்சி சார்பில் பூங்குன்றன், சமாஜ்வாதி கட்சி சார்பில் மோகனம் ஆகியோர் மனுத்தாக்கல் செய்தனர்.

காட்பாடி

பகுஜன் சமாஜ் கட்சி சார்பில் ராஜா, நாம் தமிழர் கட்சி சார்பில் அருண்குமார், திருக்குமரன், அதிமுக மாற்று வேட்பாளராக நாராயணன், இந்திய ஜனநாயக கட்சி சார்பில் சுதர்சன், சுயேட்சை வேட்பாளர்களாக ஆனந்தி, பாஸ்கரன், ராம்நாத், கே.ராமு, டி.ராமு, ராமன் உள்ளிட்ட 11 பேர் மனுத்தாக்கல் செய்தனர்.

அணைக்கட்டு

அமமுக வேட்பாளராக சதீஷ்குமார், மாற்று வேட்பாளராக காந்தி, திமுக சார்பில் தங்கதுரை, நாம் தமிழர் கட்சி சார்பில் சுமித்ரா, ஸ்டாலின் பிரேம்சந்தர், அதிமுக வேட்பாளர் வேழலகன் சார்பில் கூடுதல் மனுவாக ஒரு மனுவும் மாற்று வேட்பாளர்களாக சேரன், யுஎஸ்ஐபி கட்சி சார்பில் சாந்தி, சுயேட்சை வேட்பாளர்களாக வெங்கடேசன், நவீன்குமார், மதன்குமார், கவியரசன், செந்தில்குமார், அருண், லோகஷ், ரூபாவதி உள்ளிட்ட 17 பேர் மனுத்தாக்கல் செய்துள்ளனர்.

கே.வி.குப்பம் (தனி)

என்டிபிஎஸ்ஐ கட்சி சார்பில் சாது, ஐஜேகே சார்பில் வெங்கடசாமி, தேமுதிக சார்பில் தனசீலன், வினோத்குமார், நாம் தமிழர் கட்சி சார்பில் கூடுதல் மனுவாக திவ்யராணி, சுயேட்சை வேட்பாளர்களாக செல்வ செங்குட்டுவன், ஜெயபாரத், இளஞ்செழியன், திவ்யபாரதி உள்ளிட்ட 9 பேர் மனுத்தாக்கல் செய்துள்ளனர்.

குடியாத்தம் (தனி)

திமுக வேட்பாளர் அமலு விஜயன், அமமுக வேட்பாளர் ஜெயந்தி பத்மநாபன், இந்திய குடியரசு கட்சி சார்பில் வெண்ணிலா சார்பில் கூடுதல் மனுவும், அமமுக மாற்று வேட்பாளராக விஜயகுமார், திமுக சார்பில் குமரன், சமூக சமத்துவபடை கட்சி சார்பில் குணசீலன், மக்கள் தேசம் கட்சி சார்பில் ஜெய் கார்த்திகேயன், அதிமுக சார்பில் கிரிவாசன், அகில இந்திய இளைஞர் மேம்பாட்டு கட்சி சார்பில் சதீஷ்குமார், ஐஜேகே சார்பில் மது, ராஜன், அதிமுக சார்பில் ராஜசோழன், சுயேட்சை வேட்பாளர்களாக பிரியா, எம்.குமரன், மனோஜ்குமார், லட்சுமிபதி, ஏழுமலை, சீனிவாசன், ராதா உதயகுமார் உள்ளிட்ட 19 பேர் மனுத்தாக்கல் செய்துள்ளனர்.

அரக்கோணம் (தனி)

அமமுக சார்பில் மணிவண்ணன், மாற்று வேட்பாளராக கோமதி மணிவண்ணன், மக்கள் நீதி மய்யம் வேட்பாளர் பாஸ்கரன், விடுதலை சிறுத்தைகள் கட்சி மாற்று வேட்பாளர் நீல சந்திரகுமார், நாம் தமிழர் கட்சி சார்பில் அபிராமி எழில் கூடுதல் மனு ஒன்றும், அன்பு, சுயேட்சை வேட்பாளர்கள் பி.ரவி, வி.ரவி உள்ளிட்ட 8 பேர் மனுத்தாக்கல் செய்துள்ளனர்.

சோளிங்கர்

பாமக வேட்பாளர் அ.ம.கிருஷ்ணன் தரப்பில் நேற்று கூடுதலாக 3 மனுக்கள், மாற்று வேட்பாளராக வழக்கறிஞர் சரவணன், நாம் தமிழர் கட்சி வேட்பாளர் பாவேந்தன் தரப்பில் கூடுதல் மனு ஒன்றும், மக்கள் நீதி மய்யம் வேட்பாளர் ஜவஹர், காங்கிரஸ் வேட்பாளர் முனிரத்தினத்துக்கு மாற்று வேட்பாளர் கோபி கிருஷ்ணா, சுயேட்சை வேட்பாளர்களாக விஜயகுமார், பழனி, ராஜேந்திரன், வெங்கடேசன், ஏழுமலை, மணி, முனிரத்தினம், முனிரத்தினம், பார்த்தீபன், கணேசன் உள்ளிட்ட 17 பேர் மனுத்தாக்கல் செய்தனர்.

ஆற்காடு

அமமுக சார்பில் ஜனார்தனன், மாற்று வேட்பாளராக புவனேஸ்வரி திமுக மாற்று வேட்பாளர் ஜெ.லட்சுமணன், புதிய விடுதலை கட்சி முகமது ரபீக், மக்கள் தமிழ் தேசம் கட்சி சார்பில் வசந்தகுமார், முதலியார் முன்னேற்ற கழகம் சார்பில் எழிலரசன், சுயேட்சை வேட்பாளர்கள் மணிகண்டன், ஹரி, ஈஸ்வரன் உள்ளிட்ட 9 பேர் மனுத்தாக்கல் செய்தனர்.

ராணிப்பேட்டை

திமுக மாற்று வேட்பாளராக கமலா காந்தி, அமமுக வேட்பாளர் வீரமணி, இவருக்கு மாற்று வேட்பாளர் வினோத், வீரத்தியாகி விஸ்வநாததாஸ் தொழிலாளர்கள் கட்சி சார்பில் தியாகராஜன், தமிழ்நாடு இளைஞர் கட்சி சார்பில் சத்யராஜ், சுயேட்சை வேட்பாளர்கள் யுவராஜ், ஜெயகுமார், எஸ்.காந்தி, என்.சுகுமார், சக்திவேல்நாதன், மன்சூர் பாஷா, எஸ்.காந்தி, என்.காந்தி உள்ளிட்ட 13 பேர் மனுத்தாக்கல் செய்துள்ளனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x