

தஞ்சாவூர் சாஸ்த்ரா நிகர்நிலை பல்கலைக்கழக சட்டத் துறையில் சட்டம் மற்றும் அதன் வளர்ச்சிக்கான இருக்கை தொடங்கப்பட்டுள்ளது.
இணையவழியில் அண்மையில் நடைபெற்ற நிகழ்ச்சியில், சட்டம் மற்றும் அதன் வளர்ச்சிக்கான இருக்கையை உச்ச நீதிமன்ற நீதிபதி ரோஹிண்டன் நாரிமன் தொடங்கி வைத்தார்.
இதையடுத்து, முதலாவது எம்.கே.நம்பியார் நினைவு சொற்பொழிவு நிகழ்ச்சியைத் தொடங்கிவைத்து அவர் பேசியபோது, “நீதிமன்றங்கள் தொடர்ந்து விழிப்புடன் இருக்க வேண்டும். நாடாளுமன்றத்தில் நிகழும் தவறுகளைக் கூட கட்டுப்படுத்த அவை தவறியதில்லை. அடிப்படை உரிமைகள் தொடர்ந்து வளப்படுத்தப்பட வேண்டும். ஏ.கே.கோபாலன், கோகுல்நாத் வழக்கில் எம்.கே.நம்பியார் எடுத்துக்கொண்ட முயற்சிகள் பாராட்டுக்குரியது” என்றார்.
உச்ச நீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி எம்.என்.வெங்கடாசலய்யா தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில், வழக்கறிஞர் சி.எஸ்.வைத்தியநாதன், அட்டர்னி ஜெனரல் கே.கே.வேணுகோபால், முன்னாள் அட்டர்னி ஜெனரல் கே.பராசரன், சாஸ்த்ரா நிகர்நிலை பல்கலைக்கழக துணைவேந்தர் எஸ்.வைத்தியசுப்பிரமணியம் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.