

இலங்கையில் 2009-ம் ஆண்டு நடைபெற்ற தமிழீழத்துக்கான போரில் சிங்கள அரசால் ஈழத் தமிழர்களின் வாழ்விடங்கள் முற்றிலுமாக அழிக்கப்பட்டன. இதுதொடர்பான விசாரணையை சர்வதேச நீதிமன்றம் நடத்த வேண்டும். இலங்கை அரசை சர்வதேச நீதிமன்றத்தில் விசாரித்து உரிய தண்டனை வழங்க வேண்டும் என்பதை வலியுறுத்தி நேற்று அனைத்து கட்சி இயக்கங்கள் சார்பில் தஞ்சாவூரில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
ஆர்ப்பாட்டத்துக்கு, தமிழர் தேசிய முன்னணியின் தேர்தல் பணிக் குழு உறுப்பினர் அய்யனாபுரம் சி.முருகேசன் தலைமை வகித்தார். ஒருங்கிணைப்பாளர் துரை.மதிவாணன் முன்னிலை வகித்தார். மக்கள் அதிகாரத்தின் மாநிலப் பொருளாளர் காளியப்பன், சிபிஎம்எல் மக்கள் விடுதலை மாவட்டச் செயலாளர் ரா.அருணாச்சலம், சமவெளி விவசாயிகள் இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் சு.பழனிராஜன், தமிழ்த் தேசிய பேரியக்கத்தின் மாவட்டச் செயலாளர் நா.வைகறை உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.