

திருவாரூர்: திருவாரூர் மாவட்ட தமிழ்நாடு கோயில் பூசாரிகள் நலச் சங்கத் தலைவர் வாசு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது:
பூசாரிகளுக்கு வழங்கப்படும் ஓய்வூதியம் ரூ.4 ஆயிரமாக உயர்த்தப்படும். தமிழகத்தில் இந்து சமய அறநிலையத் துறையின் கட்டுப்பாட்டில் உள்ள அனைத்து கோயில்களின் சொத்தையும் கண்காணித்து பாதுகாக்க 25 ஆயிரம் இளைஞர்கள் பணி நியமனம் செய்யப்படுவார்கள். பத்ரிநாத், ரிஷிகேஷ் போன்ற வடநாட்டு திருத்தலங்களுக்கு சென்று வரும் பக்தர்களுக்கு வழங்கப்பட்டு வரும் ரூ.25 ஆயிரம் ஒரு லட்சம் பேருக்கு வழங்கப்படும் என்பன உட்பட பல்வேறு அம்சங்கள் திமுக தேர்தல் அறிக்கையில் இடம் பெற்றுள்ளன. இதுவரை நடந்த தேர்தல்களில் பல்வேறு கட்சிகள் தேர்தல் அறிக்கைகள் வெளியிட்டாலும், பூசாரிகளுக்கு பெயரளவில்தான் நலத் திட்டங்கள் அறிவிக்கப்பட்டன. ஆனால், திமுக தேர்தல் அறிக்கை பூசாரிகளின் வாழ்வில் ஒளி ஏற்றுவதாக உள்ளது. எனவே, இந்த தேர்தலில் திமுக கூட்டணியை கோயில் பூசாரிகள் நலச் சங்கம் ஆதரிக்க உள்ளது என தெரிவித்துள்ளார்.