வேலூர், ராணிப்பேட்டை மாவட்டங்களில் : 3 பேர் மனுத்தாக்கல் :

வேலூர், ராணிப்பேட்டை மாவட்டங்களில் : 3 பேர் மனுத்தாக்கல் :
Updated on
1 min read

தமிழகத்தில் சட்டப்பேரவைத் தேர்தலுக்கான மனுத்தாக்கல் கடந்த 12-ம் தேதி தொடங்கிய நிலையில் வரும் 19-ம் தேதி பிற்பகல் 3 மணிக்கு நிறைவு பெறுகிறது. அதன்படி, மனுத்தாக்கல் தொடங்கியதன் மூன்றாம் நாளான நேற்று செவ்வாய்க்கிழமை என்பதால் வேட்பாளர்கள் தரப்பில் மனுத்தாக்கல் செய்வதில் பெரியளவில் ஆர்வம் காட்டவில்லை. வேலூர் மாவட்டத்தில் கே.வி.குப்பம் தனி தொகுதியில் நாம் தமிழர் கட்சி வேட்பாளர் திவ்ய ராணி தரப்பில் இருந்து நேற்று இரண்டாவது மனு தாக்கல் செய்யப்பட்டது.

அதேபோல், ராணிப்பேட்டை மாவட்டத்தில் சோளிங்கர் தொகுதியில் வீரத்தியாகி விஸ்வநாததாஸ் தொழிலாளர்கள் கட்சி சார்பில் வினோத் என்பவரும், ஆற்காடு சட்டப்பேரவை தொகுதியில் நாம் தமிழர் கட்சி வேட்பாளர் கதிரவன் என்பவரும் நேற்று மனுத்தாக்கல் செய்துள்ளனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in