

செஞ்சியில் திமுக ஊர்வலத்தில் பட்டாசு வெடித்ததில் வீடு தீப் பிடித்தது.
செஞ்சி தொகுதியில் திமுக சார்பில் நேற்று வேட்பு மனுத்தாக் கல் செய்ய மாதா கோயிலிருந்து ஊர்வலமாக செல்ல திமுக மற்றும் கூட்டணிக்கட்சியினர் திரண்டனர்.
அப்போது பட்டாசு வெடிக்கும் போது அதிலிருந்து தெறித்த தீப்பொறி அருகில் இருந்த வீட்டில் விழுந்ததில் வீடு தீப்பிடித்தது.
இதையறிந்த திமுகவினர் மற்றும் பொதுமக்கள் தீயை அணைக்க போராடினார் கள்.
ஆனால் தீயை கட்டுக்குள் கொண்டுவரமுடியவில்லை. இத்தகவல் அறிந்த செஞ்சி தீயணைப்புத்துறையினர் விரைந்து வந்து தீயை அணைத்தனர்.
பாதிக்கப்பட்டவர்கள் பிரச்சாரத்தில் ஈடுபட்டவர்களிடம் தங்களுக்கு நிவாரணம் வழங்க வேண்டும் என்று முறையிட்டுள்ளனர்.