

இந்திய தேர்தல் ஆணையத்தின் வாசகங்கள் அடங்கிய கோலப்போட்டி நடத்தப்பட்டு வாக்காளர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் ஊராட்சி ஒன்றிய அலுவலக வளாகத்தில், சட்டப்பேரவைத் தேர்தலில் வாக்குரிமை பெற்ற அனைவரும் வாக்களிப்பது தொடர்பாக, இந்திய தேர்தல் ஆணையத்தின் வாசகங்கள் அடங்கிய கோலப்போட்டி நடத்தப்பட்டு வாக்காளர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. இந்நிகழ்ச்சி யில், பர்கூர் சட்டப்பேரவைத் தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலரும், மாவட்ட சமூக பாதுகாப்புத் திட்ட தனித்துணை ஆட்சியருமான பாக்யலட்சுமி, ஒருங்கிணைப்பு அலுவலர் தேவராஜன், போச்சம்பள்ளி சமூக பாதுகாப்புத் திட்ட தனி வட்டாட்சியர் அனிதா, உதவி ஒருங்கிணைப்பு அலுவலர் பொன்னாலா, வருவாய்த்துறை, ஊரக வளர்ச்சித் துறை பணி யாளர்கள் மற்றும் புதுவாழ்வுத் திட்டப் பணியாளர்கள் கலந்து கொண்டனர்.