கிருஷ்ணகிரி மாவட்டத்தில் - 5 தொகுதிகளில் 19 பேர் வேட்புமனு தாக்கல்தருமபுரி / :
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 5 சட்டப்பேரவை தொகுதியில் 19 பேர் வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர்.
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள ஊத்தங்கரை (தனி), பர்கூர், கிருஷ்ணகிரி, வேப்பனப்பள்ளி, ஓசூர், தளி ஆகிய 6 சட்டப்பேரவைத் தொகுதிகளில் வேட்புமனு தாக்கல் கடந்த 12-ம் தேதி தொடங்கியது. முதல் நாள் ஒருவர் கூட வேட்புமனு தாக்கல் செய்யவில்லை. 2-வது நாளான நேற்று(15-ம் தேதி) அதிமுக, திமுக, நாம் தமிழர் கட்சி, வீரதியாகி விஸ்வநாததாஸ் தொழிலாளர் கட்சி, சிவசேனா கட்சி, சுயேச்சை வேட்பாளர்கள் உட்பட 19 பேர் மனு தாக்கல் செய்துள்ளனர்.
கிருஷ்ணகிரி, வேப்பனப்பள்ளி, ஓசூரில் அதிகபட்ச மாக 5 வேட்பாளர்களும், பர்கூரில் 3 வேட்பாளர் களும், ஊத்தங்கரையில் ஒரு வேட்பாளரும் வேட்புமனு தாக்கல் செய்தனர். தளி தொகுதியில் ஒருவர் கூட வேட்புமனு தாக்கல் செய்யவில்லை.
முன்னதாக, வேட்புமனு தாக்கல் செய்யப்படும் கிருஷ்ணகிரி கோட்டாட்சியர் அலுவலகம், பர்கூர் வட்டாட்சியர் அலுவலகம், ஊத்தங்கரை வட்டாட்சியர் அலுவலகம், சூளகிரி வட்டாட்சியர் அலுவலகம், ஓசூர் கோட்டாட்சியர் அலுவலகம், தேன்கனிக்கோட்டை வட்டாட்சியர் அலுவலகங்களுக்கு முன்பு அந்தந்த உட்கோட்ட காவல் துணை கண்காணிப்பாளர்கள் தலைமையில் போலீஸார், மத்திய துணை ராணுவப் படையினர் பாதுகாப்புப்பணியில் ஈடுபட்டனர்.
தருமபுரி மாவடத்தின் 5 தொகுதிகளிலும் சேர்த்து நேற்று 11 வேட்பாளர்கள் வேட்பு மனு தாக்கல் செய்தனர்.
