அரசியல் கட்சி சுவர் விளம்பரங்கள் அகற்றம் :

அரசியல் கட்சி சுவர் விளம்பரங்கள் அகற்றம் :

Published on

கிருஷ்ணகிரி மற்றும் தளி தொகுதிகளில் அனுமதியின்றி பொது இடங்களில் எழுதப்பட்ட அரசியல் சுவர் விளம்பரங்களை அலுவலர்கள் அகற்றினர்.

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள ஊத்தங்கரை(தனி), பர்கூர், கிருஷ்ணகிரி, வேப்பனப்பள்ளி, ஓசூர், தளி சட்டப் பேரவைத் தொகுதிகளில் தேர்தல் விதிமுறைகள் அமல்படுத்தப்பட்டுள்ளன. அதன்படி பொது இடங்களில் அரசியல் கட்சியினரின் சுவர் விளம்பரங்கள், சுவரொட்டிகள், பேனர்கள் உள்ளிட்டவற்றை அகற்ற அறிவுறுத்தப்பட்டுள்ளது. தேர்தல் பணியில் ஈடுபட்டுள்ள அலுவலர்கள், விதிகளை மீறி பொது இடங்களில் எழுதப்பட்டுள்ள அரசியல் கட்சி விளம்பரங்களை அகற்றி வருகின்றனர்.

அதன்படி நேற்று முன்தினம் கிருஷ்ணகிரியில் 10 இடங்கள், தளியில் 40 இடங்கள் என விதிமுறைகளை மீறி பொது இடங்களில் எழுதப்பட்டிருந்த 50 அரசியல் கட்சி சுவர் விளம்பரங்கள் அழிக்கப்பட்டன.

இதே போல் கட்சி சுவரொட்டிகள், பேனர்கள் உட்பட 336 அரசியல் கட்சி விளம்பரங்கள் அகற்றப்பட்டுள்ளதாக தேர்தல் நடத்தும் அலுவலர்கள் தெரிவித்தனர்.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in