திருப்பூர் சட்டப்பேரவைத் தொகுதிகள் வாக்குச்சாவடி - அலுவலர்களுக்கு பணி ஒதுக்கீடு :

திருப்பூர் சட்டப்பேரவைத் தொகுதிகள் வாக்குச்சாவடி  -  அலுவலர்களுக்கு பணி ஒதுக்கீடு :
Updated on
1 min read

திருப்பூர் மாவட்டத்திலுள்ள 3343 வாக்குச்சாவடிகளில் பணிபுரிய உள்ள வாக்குச்சாவடி அலுவலர்களுக்கு கணினி மூலமாக பணி ஒதுக்கீடு செய்யும் பணி, மாவட்ட தேர்தல் அலுவலரும் ஆட்சியருமான க.விஜயகார்த்திகேயன் தலைமையில் நேற்று நடைபெற்றது.

தாராபுரம் (தனி) தொகுதி - 1675 வாக்குச்சாவடி அலுவலர்கள், காங்கயம் - 1786, அவிநாசி (தனி) - 1925, திருப்பூர் வடக்கு - 2568, திருப்பூர் தெற்கு - 1925, பல்லடம் - 2630, உடுமலைப்பேட்டை - 1824, மடத்துக்குளம் - 1714 என மொத்தம் 16,067 அலுவலர்கள் நியமிக்கப்படுகின்றனர்.

18-ம் தேதி பயிற்சி

வருவாய் அலுவலர் கு.சரவணமூர்த்தி, ஆட்சியரின் நேர்முக உதவியாளர் சாகுல் ஹமீது, தேர்தல் வட்டாட்சியர் ச.முருகதாஸ் உட்பட பலர் பங்கேற்றனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in