

பல்லடம் சட்டப்பேரவைத் தொகுதிக்கு உட்பட்ட சின்னக்கரை பகுதியில் பறக்கும் படையினர் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தபோது, திருப்பூரில் இருந்து இருசக்கர வாகனத்தில் வந்த நபரை நிறுத்தி சோதனையிட்டனர். அவரது பெயர் அப்துல் சலாம் முஜிக்கல் என்பதும், திருப்பூர் கொங்கு பிரதான சாலையில் பேக்கரி நடத்தி வருவதாகவும், வியாபாரம் செய்த பணத்தை எடுத்துக்கொண்டு கேரள மாநிலம் செல்வதாகவும் தெரிவித்தார். உரிய ஆவணங்கள் இல்லாததால், ரூ.75 ஆயிரத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
இதேபோல, திருப்பூர்-காங்கயம் சாலை நல்லூர் ஈஸ்வரன் கோயில் அருகே பனியன் உரிமையாளர் பாலு என்பவரிடம் இருந்து ரூ.82 ஆயிரத்தை திருப்பூர் தெற்கு சட்டப்பேரவைத் தொகுதி பறக்கும் படையினர் பறிமுதல் செய்தனர்.