கைத்தறியின் 11 ரகங்களை : விசைத்தறியில் தயாரித்தால் சட்ட நடவடிக்கை :

கைத்தறியின் 11 ரகங்களை  : விசைத்தறியில் தயாரித்தால்  சட்ட நடவடிக்கை :
Updated on
1 min read

கைத்தறி மூலம் தயாராகும் 11 ரகங்களை விசைத்தறியாளர்கள் மற்றும் துணி ஆலைகளில் தயாரித்தால் சட்டரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என சேலம் ஆட்சியர் எச்சரித்துள்ளார்.

இதுதொடர்பாக சேலம் ஆட்சியர் ராமன் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

கைத்தறி ரக ஒதுக்கீடு சட்டம் 1985 சட்டப்பிரிவின் கீழ் ஒரு சில தொழில்நுட்ப குறிப்பீடுகளுடன் 11 ரகங்களை விசைத்தறிகளில் உற்பத்தி செய்ய தடை செய்யப்பட்டுள்ளது. இந்த ரகங்களை விசைத்தறிகளில் உற்பத்தி செய்யப்படுவது கண்டுபிடிக்கப்பட்டால் சம்பந்தப்பட்ட விசைத்தறியாளர் மீது காவல் துறையில் புகார் செய்யப்பட்டு வழக்குப் பதிவு செய்யப்படும். மேலும், நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டு ஆறுமாத சிறை தண்டனை அல்லது தறி ஒன்றுக்கு ரூ.5 ஆயிரம் வீதம் அபராதம் அல்லது இரண்டும் சேர்த்து தண்டனை வழங்கப்படும் என்று தெரிவித்துள்ளார்

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in