Published : 13 Mar 2021 03:12 AM
Last Updated : 13 Mar 2021 03:12 AM

குடிநீர் விநியோகப் பணிகள் ஆய்வு :

கோவை மாநகராட்சிக்கு உட்பட்டபகுதிகளில் குடிநீர் விநியோகம் செய்வது தொடர்பான ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது.

மாநகராட்சி அலுவலகத்தில் நடைபெற்ற இந்தக் கூட்டத்துக்கு, மாநகராட்சி ஆணையர் பெ.குமாரவேல் பாண்டியன் தலைமை வகித்தார்.

துணை ஆணையர் ச.மதுராந்தகி, மாநகரப் பொறியாளர் ஆ.லட்சுமணன் மற்றும் குடிநீர் வடிகால் வாரியப் பொறியாளர்கள், மாநகராட்சி அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

இதில், மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் குடிநீர் விநியோகம் செய்வது, புதிதாக சேர்க்கப்பட்ட பகுதிகளுக்கு குடிநீர் வழங்குவது தொடர்பாக பொறியாளர்கள் மற்றும் அதிகாரிகளிடம் மாநகராட்சி ஆணையர் கேட்டறிந்தார். பொதுமக்களுக்கு தங்குதடை யின்றி சீரான வகையில் குடிநீர் விநியோகம் மேற்கொள்ளுமாறு அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப் பட்டது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x