Published : 13 Mar 2021 03:12 AM
Last Updated : 13 Mar 2021 03:12 AM
நாமக்கல்: நாமக்கல் மாவட்டத்தில் உள்ள 6 சட்டப்பேரவைத் தொகுதியில் 5 தொகுதியில் திமுக போட்டியிடுகிறது. இதில், பரமத்தி வேலூர் மற்றும் சேந்தமங்கலம் தொகுதியில் போட்டியிட முன்னாள் எம்எல்ஏக்களுக்கு 2-வது முறையாக வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
திமுக சார்பில் சட்டப்பேரவை தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர் பட்டியல் நேற்று வெளியிடப்பட்டது. நாமக்கல் மாவட்டத்தில் உள்ள 6 சட்டப்பேரவைத் தொகுதிகளில் நாமக்கல், சேந்தமங்கலம் (தனி), ராசிபுரம் (தனி), குமாரபாளை யம், பரமத்தி வேலூர் ஆகிய 5 தொகுதியில் திமுக போட்டியிடுகிறது. ஒரு தொகுதி கூட்டணிக் கட்சியான கொமதேகவுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
இதில், நாமக்கல் தொகுதிக்கு திமுக கிழக்கு மாவட்ட துணைச் செயலாளர் பெ.ராமலிங்கம், சேந்தமங்கலம் தொகுதிக்கு முன்னாள் எம்எல்ஏ கே.பொன்னுசாமி, ராசிபுரம் - திமுக மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் டாக்டர் எம்.மதிவேந்தன், குமாரபாளையம் தொகுதியில் எம்.வெங்கடாசலம் மற்றும் பரமத்தி வேலூரில் தற்போதைய எம்எல்ஏவும், நாமக்கல் மேற்கு மாவட்ட பொறுப்பாளருமான கே.எஸ்.மூர்த்தி ஆகியோருக்கு சீட் வழங்கப்பட்டுள்ளது. இதில், சேந்தமங்கலம், பரமத்தி வேலூர் வேட்பாளர் தவிர மற்ற 3 தொகுதி வேட்பாளர்களும் புதிதாக களம் இறக்கப்பட்டுள்ளனர்.
நாமக்கல் மாவட்டத்தில் உள்ள 6 தொகுதியிலும் அதிமுக நேரடி களம் காணும் நிலையில், 5 தொகுதியில் அதிமுக, திமுகவுக்கும் நேரடி போட்டி நிலவுகிறது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT