பண்ருட்டி அருகே  -  பெண் சாராய வியாபாரி குண்டர் சட்டத்தில் கைது :

பண்ருட்டி அருகே - பெண் சாராய வியாபாரி குண்டர் சட்டத்தில் கைது :

Published on

கடந்த 19.2.2021-ம் தேதி பண்ருட்டி மதுவிலக்கு அமல் பிரிவு காவல் ஆய்வாளர் தாரகேஸ்வரி மற்றும் போலீஸார் ஒதியடிக்குப்பம் முருகன் கோயில் பின்புறம் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது 110 லிட்டர் சாராயத்துடன் நின்றிருந்த அதே பகுதியை சேர்ந்த சந்திரசேகர் மனைவி மாணிக்கவள்ளி (50) என்பவர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

இவர் மீது பண்ருட்டி மதுவிலக்கு அமல் பிரிவில் 7 வழக்குகள் உள்ளன.இவரின் குற்ற செய்கையை கட்டுப்படுத்தும் பொருட்டு கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அபிநவ் பரிந்துரையின் பேரில் மாவட்ட ஆட்சியர் சந்திரசேகர் சாகமூரி, குண்டர் சட்டத்தில் மாணிக்கவள்ளியை கைது செய்ய உத்தரவிட்டார்.

இதனையடுத்து போலீஸார் கடலூர் மத்திய சிறையில் இருந்த மாணிக்கவள்ளியிடம் உத்தரவு நகலை வழங்கினர்.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in