கோடை வெயில் அதிகரிப்பால் தர்பூசணி விற்பனை அதிகரிப்பு :

கோடை வெயில் அதிகரிப்பால் தர்பூசணி விற்பனை அதிகரிப்பு  :
Updated on
1 min read

கடந்த சில நாட்களாக சுட்டெரிக்கும் வெயிலின் தாக்கம் அதிகரித்துள்ள நிலையில், சேலத்தில் தர்பூசணி, கரும்புப்பால், குளிர்பானங்களின் விற்பனை அதிகரித்துள்ளது.

சேலம் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. வெயிலின் தாக்கம் அதிகம் இருப்பதால், மதிய வேளையில் குளிர்பானக் கடைகளிலும், தர்பூசணி, கரும்புப்பால் விற்பனை கடைகளில் விற்பனை அதிகரித்துள்ளது.

கோடை வெயில் விற்பனையை குறி வைத்து தர்பூசணி பழங்கள் அதிகளவு வியாபாரிகள் கொள்முதல் செய்து விற்பனை செய்து வருகின்றனர். திண்டிவனத்தில் இருந்து தினமும் 100 டன்னுக்கு மேல் தர்பூசணி பழம் சேலத்துக்கு விற்பனைக்கு வருகிறது.

சேலத்தில் பல்வேறு சாலை சந்திப்பு பகுதிகளில் சாலையோரங்களில் தர்பூசணி குவியலாக போட்டு வியாபாரிகள் விற்பனை செய்து வருகின்றனர். தர்பூசணி பழம் கிலோ ரூ.13.50 முதல் ரூ.20 வரை விற்பனை செய்யப்படுகிற்து.

அதேபோல, சாலையோர வியாபாரிகள் ஒரு கீற்று ரூ.10 விலையில் விற்பனை செய்கின்றனர். கரும்புப்பால் டம்ளர் ரூ.10 முதல் ரூ.15 வரை விற்பனை செய்யப்படுகிறது.

அதேபோல, குளிர்பானம், ஐஸ் கிரீம் பார்லர்களில் வழக்கத்தை காட்டிலும் பொதுமக்களின் கூட்டம் அதிகரித்துள்ளது. வரும் நாட்களில் மேலும் வெயிலின் தாக்கம் அதிகரிக்க வாய்ப்புள்ளதால், இவற்றின் விற்பனை அதிகரிக்கும் என்பதால், இத்தொழிலில் ஈடுபட்டுள்ள வியாபாரிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.சேலம் சத்திரம் பகுதியில் விற்பனைக்காக குவித்து வைக்கப்பட்டுள்ள தர்பூசணி பழங்கள். படம்: எஸ்.குரு பிரசாத்

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in