செங்கம் அருகே எம்ஜிஆர் சிலை சேதம் :

செங்கம் அருகே சேதமடைந்த எம்ஜிஆர் சிலை.
செங்கம் அருகே சேதமடைந்த எம்ஜிஆர் சிலை.
Updated on
1 min read

செங்கம் அருகே எம்ஜிஆர் சிலை சேதப்படுத்தப்பட்டதால் அங்கு பதற்றம் ஏற்பட்டுள்ளது.

தி.மலை மாவட்டம் செங்கம் அடுத்த கொட்டாவூர் கிராமம் அண்ணா நகரில் முன்னாள் முதல்வர் எம்ஜிஆர் சிலை உள்ளது. தேர்தல் நடத்த விதிகள் அமலில் இருப்பதால், இரட்டை இலை சின்னத்தை காண்பிக்கும் எம்ஜிஆர் சிலை மூடப்பட்டிருந்தது.

இந்நிலையில், எம்ஜிஆர் சிலையின் வலது கை சேதப்படுத் தப்பட்டிருப்பது நேற்று காலை தெரியவந்தது. இதையறிந்த அதிமுகவினர், அங்கு திரண்டனர். அப்போது அவர்கள், சிலையை சேதப்படுத்தியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என முழக்கமிட்டனர். இதனால் பதற்றமான நிலை ஏற்பட்டது.

இதுகுறித்து தகவலறிந்த செங்கம் காவல்துறையினர் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை நடத்தினர்.

மேலும், சிலையை சேதப்படுத்தியவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப் படும் என காவல்துறையினர் உறுதி அளித்ததால், அதிமுகவினர் அங்கிருந்து கலைந்து சென்றனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in