கடலூர் மாவட்டத்தில் - மது கடத்தலை தடுக்க அதிகாரிகள் நியமனம் :

கடலூர் மாவட்டத்தில்  -  மது கடத்தலை தடுக்க அதிகாரிகள் நியமனம் :
Updated on
1 min read

கடலூர் மாவட்ட தேர்தல் அலுவலர் சந்திர சேகர் சாகமூரி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

தமிழக சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளதை முன்னிட்டு தேர்தல் நடத்தை விதிகள் உடனடி யாக அமலுக்கு வரப்பெற்றுள்ளது.

எனவே கடலூர் மாவட்டத்தில் கள்ளத்தனமாக மதுபாட் டில்கள்,கள்ளச்சாராயம் விற்பனை மற்றும் கடத்தலை தடுக்கும் பொருட்டு அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். மதுபான கடைகளில் தினசரி விற்பனையை கண்காணிக்கவும், மதுபானம் தொடர் பான புகார்கள் மீது நடவடிக்கை மேற்கொள்ள கடலூர் மாவட்ட டாஸ்மாக் மேலாளர் ரவிக்குமார் மற்றும் கடலூர் டாஸ்மாக் உதவி மேலாளர் (கணக்கு) தேவகண்ணன் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர். டாஸ்மாக் மாவட்ட மேலாளர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள கட்டுப்பாட்டு அறையில் இப்பணிகளை மேற்கொள்வார். உதவி மேலாளர் மாவட்டம் முழுவதும் கண்காணிப்பு பணி களில் இருப்பார்.

இது குறித்த புகார்கள் இருந்தால் டாஸ்மாக் மாவட்ட மேலாளருக்கு 9443636745 என்ற அலைபேசி எண்ணிலும், உதவி மேலாளருக்கு 9750498912 என்ற அலைபேசி எண்ணிலும் தெரிவிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in