Regional03
காவேரிப்பட்டணம் மாரியம்மன் கோயிலில் நகை, உண்டியல் பணம் திருட்டு :
காவேரிப்பட்டணம் மாரியம்மன் கோயிலில் நகை, உண்டியல் பணத்தை திருடிச் சென்ற மர்ம நபர்களை போலீஸார் தேடி வருகின்றனர்.
கிருஷ்ணகிரி மாவட்டம் காவேரிப்பட்டணம் அம்பேத்கர் காலனியில் பெரிய மாரியம்மன் கோயில் உள்ளது. இக்கோயிலுக்கு நேற்று காலை வந்த பக்தர்கள், கோயில் பூட்டு உடைக்கப்பட்டிருந்தை கண்டு அதிர்ச்சியடைந்தனர். இதுகுறித்து காவேரிப்பட்டணம் போலீஸாருக்கு தகவல் அளித்தனர். தகவலறிந்து வந்த போலீஸார் கோயிலின் உள்ளே சென்று பார்த்த போது, கருவறையில் வைக்கப்பட்டிருந்த பீரோ உடைக்கப்பட்டு அதிலிருந்து 3 பவுன் தங்க நகைகள் மற்றும் உண்டியலை உடைத்து அதிலிருந்த பணத்தை மர்ம நபர்கள் திருடிச் சென்றது தெரிந்தது. இதுதொடர்பாக போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
