

கோவையில் வரும் 10-ம் தேதி தபால் துறை குறைதீர் கூட்டம் நடக்கிறது. எனவே, வாடிக்கையாளரகள், தங்களது குறைகளை தபால் மூலம் அனுப்பி தீர்வு காணலாம்.
இதுதொடர்பாக சேலம் கிழக்கு கோட்ட அஞ்சல் முதுநிலை கண்காணிப்பாளர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
மண்டல அளவில் நடத்தப்படும் குறை தீர்கூட்டம் வரும் 10ம் தேதி கோவை ஆர்.எஸ்.புரம் மேற்கு மண்டல தலைமை அஞ்சல் அலுவலக கட்டிடம் இண்டாவது தளத்தில் தபால் துறை தலைவர் தலைமையில் நடக்கிறது. எனவே, இந்த முகவரிக்கு சேலம் கிழக்கு கோட்டத்துக்கு உட்பட்ட வாடிக்கையாளர்கள் அஞ்சல் துறை தொடர்பான குறைகளை தபால் மூலம் இன்று (4-ம் தேதி) மாலைக்குள் கிடைக்கும்படி அனுப்பி வைக்க வேண்டும். தபால் உறையின் மேல் DAK Adllat Case என்று எழுதவும்.
மணியார்டர், விபிபி, விபிஎல், பதிவு தபால், விரைவு தபால், காப்பீடு பதிவு அஞ்சல் எண், அலுவலகத்தின் பெயர், காப்பீடு தபால் தொடர்பான புகார்கள் எனில் அனுப்பிய தேதி, முழு முகவரி இடம் பெற்றிருக்க வேண்டும்.
சேமிப்பு வங்கி அல்லது அஞ்சல் காப்பீடு பற்றிய புகார்கள் என்றால் கணக்கு எண், பாலிசி எண், வைப்புத் தொகையாளரின் பெயர், வசூலிக்கப்பட்ட விவரங்கள் அல்லது வேறு ஏதேனும் குறிப்புகள் இருந்தால் தெரிவிக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.