

தஞ்சாவூர் மாவட்டம் திருவையாறு அருகே அள்ளூர் அளிசக்குடியைச் சேர்ந்தவர் குருநாதன்(40), விவசாய கூலித் தொழிலாளி. இவர் கடந்த ஆண்டு மே மாதம் 15 வயது சிறுமியை மிரட்டி பாலியல் பலாத்காரம் செய்ததுடன், வெளியே சொல்லக் கூடாது என கொலை மிரட்டலும் விடுத்துள்ளார். இந்நிலையில், கர்ப்பமடைந்த அந்தச் சிறுமிக்கு கடந்த 1-ம் தேதி மருத்துவமனையில் பெண் குழந்தை பிறந்தது. இதுதொடர்பாக, மருத்துவர்கள் கொடுத்த தகவலின்பேரில் அங்கு சென்று விசாரணை நடத்திய திருவையாறு அனைத்து மகளிர் காவல் நிலைய போலீஸார், இதுதொடர்பாக போக்ஸோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து, குருநாதனை கைது செய்தனர்.