

தமிழக சட்டப்பேரவை தேர்தலைமுன்னிட்டு காவல் உதவி ஆய்வாளர்கள் பணியிட மாற்றம் செய்யப்பட்டு வருகின்றனர். அதன்படி தூத்துக்குடி மாவட்டத்தில் பணியாற்றி வரும் 19 காவல் உதவி ஆய்வாளர்களை மாவட்டத்துக்குள் பணியிட மாற்றம் செய்து எஸ்.பி. ஜெயக்குமார் உத்தரவிட்டுள்ளார். அதேபோன்று திருநெல்வேலி, தென்காசி, கன்னியாகுமரி மாவட்டங்களில் பணியாற்றி வந்த 71காவல் உதவி ஆய்வாளர்கள் தூத்துக்குடி மாவட்டத்துக்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். அவர்களை மாவட்டத்தின் பல்வேறு காவல் நிலையங்களில் பணி நியமனம் செய்து எஸ்பி உத்தரவிட்டுள்ளார்.