Published : 01 Mar 2021 03:17 AM
Last Updated : 01 Mar 2021 03:17 AM

சிலம்பம் போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசளிப்பு விழா

வேலூர் சின்ன அல்லாபுரம், கே.கே. நகரில் எம்.ஸ்டார் சிலம்பம் குழுவில் 400 மாணவர்களுக்கு இலவசமாக சிலம்பக்கலை பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. சிலம்பக் குழுவின் பயிற்சியாளர் மணிகண்டன் சிலம்பக்கலையுடன் வேறு சில கலைகளையும் கற்றுத் தருகிறார்.

இந்நிலையில், அகில இந்திய சிலம்பம் விளையாட்டு சங்கம் சார்பில், ஆன்லைன் மூலம் சர்வதேச சிலம்பம் போட்டி நடத்தப்பட்டது. இதில், வேலூர் மாவட்டத்தைச் சேர்ந்த 17 மாணவர்கள் சிலம்பம் போட்டியில் வெற்றிபெற்றனர்.

இதைத்தொடர்ந்து, சிலம்பம் போட்டியில் வெற்றிபெற்ற மாண வர்களுக்கு பரிசளிப்பு விழா நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு லயன்சங்க செயலாளர் காமராஜ் தலைமை வகித்தார். திருவள்ளு வர் சேவா சங்கத்தின் நிறுவனத் தலைவர் தர் வாழ்த்துரை வழங்கினார்.

மாணவர்களின் சிலம்பம் கலை நிகழ்ச்சி நடைபெற்றது. சிலம்பம் போட்டியில் வெற்றிபெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் மற்றும் கோப்பையுடன் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x