டேங்கர் லாரி மோதி அரசுப் பேருந்து டிக்கெட் பரிசோதகர் உயிரிழப்பு

டேங்கர் லாரி மோதி அரசுப் பேருந்து டிக்கெட் பரிசோதகர் உயிரிழப்பு
Updated on
1 min read

பல்லடம் அருகே டேங்கர் லாரி மோதி விபத்துக்குள்ளானதில், அரசுப் பேருந்து பயணச்சீட்டு பரிசோதகர் உயிரிழந்தார்.

கோவை மாவட்டம் சிங்காநல்லூரை சேர்ந்தவர் பிரகாசம் (55). இவர், திருப்பூர் அரசுப் போக்குவரத்துக் கழகத்தில் பயணச்சீட்டு பரிசோதகராக பணிபுரிந்து வந்தார். இந்நிலையில், பல்லடம் - கோவை நோக்கி நேற்று மதியம் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தபோது, பெரும்பாளி அருகே டேங்கர் லாரி மோதியதில் பலத்த காயமடைந்தார். இதில், சம்பவ இடத்திலேயே அவர் உயிரிழந்தார். இதுதொடர்பாக பல்லடம் போலீஸார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in