

சிதம்பரத்தில் வேளாண் விற்பனை மற்றும் வேளாண் வணிகத்துறை மூலம் தமிழ்நாடு நீர்ப்பாசன வேளாண்மை நவீன மயமாக்கல் திட்டத்தின் கீழ் உழவர் உற்பத்தியாளர் நிறுவனங்களுக்கான மாநில அளவிலான வர்த்தக தொடர்பு குறித்த 2 நாள் பயிற்சிப் பட்டறை நேற்று தொடங்கியது. சிதம்பரம் சார்-ஆட்சியர் மதுபாலன் தொடங்கி வைத்தார். வேளாண் துணை இயக்குநர் (வேளாண் வணிகம்) பிரேம் சாந்தி வரவேற்றார். சென்னை வேளாண் இணை இயக்குநர் (வேளாண் வணிகம்) சேகர், கடலூர் வேளாண் இணை இயக்குநர் (பொறுப்பு) ரமேஷ், உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.