

சிதம்பரம் சட்டமன்ற அதிமுக செயல்வீரர்கள் ஆலோசனை கூட்டம் நேற்று நடந்தது.
சிதம்பரத்தில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்ற கூட்டத்திற்கு மாவட்ட அவைத்தலைவர் குமார் தலைமை தாங்கினார். அதிமுக கிழக்கு மாவட்ட செயலாளரும், சிதம்பரம் சட்டமன்ற உறுப்பி னருமான பாண்டியன், அதிமுக அமைப்பு செயலாளரும் காட்டு மன்னார்கோவில் சட்டமன்ற உறுப்பினருமான முருகுமாறன், அதிமுக துணை கொள்கை பரப்பு செயலாளர் இளங்கோவன், முன்னாள் அமைச்சர் செல்விராமஜெயம் ஆகியோர் கலந்து கொண்டு பேசினர். நகர செயலாளர் செந்தில்குமார், சிதம்பரம் வேளாண் கூட்டுறவு உற்பத்தியாளர்கள் சங்க தலைவர் டேங் சண்முகம், முன்னாள் நகர செயலாளர் தோப்பு சுந்தர், கருப்பு ராஜா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
இதில் எம்எல்ஏ பாண்டியன் பேசியது: சிதம்பரம் அருகே உள்ள கொள்ளிடம் ஆற்றில் கீழத்திருக்கழிப்பாலை, கருப்பூர் அருகில் 2 தடுப்பணைகள் வர உள்ளன. திமுக தலைவர் ஸ்டாலின் மற்றும் உதயநிதி ஸ்டாலின் ஆகியோர் வரம்பு மீறி பேசி வருகின்றனர். இது நல்லதல்ல என்று தெரிவித்தார்.
இதில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் பிறந்த நாளை சிறப்பாக கொண்டாடுவது. அன்றுசிதம்பரம் நகரில் உள்ள 33 வார்டுகளிலும் அதிமுக கொடி யேற்றி நலத்திட்ட உதவிகளைவழங்குவது உள்ளிட்ட தீர் மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
சிதம்பரம் அருகே உள்ள கொள்ளிடம் ஆற்றில் கீழத்திருக்கழிப்பாலை, கருப்பூர் அருகில் 2 தடுப்பணைகள் வர உள்ளன.