தொழில் முனைவோருக்கு விழிப்புணர்வு கருத்தரங்கம்

தொழில் முனைவோருக்கு விழிப்புணர்வு கருத்தரங்கம்
Updated on
1 min read

தேனி நாடார் சரஸ்வதி பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூ ரியில் தொழில் முனை வோருக்கு விழிப்புணர்வுக் கருத் தரங்கம் இணையவழி மூலம் நடைபெற்றது. எலக்ட்ரானிக்கல் மற்றும் எலக்ட்ரானிக்ஸ் துறைத் தலைவர் எம்.அறிவழகன் வர வேற்றார்.

கல்லூரிச் செயலாளர் கேஎஸ்.காசிபிரபு, இணைச் செயலாளர் ஏ.ராஜ்குமார், முதல்வர் சி.மதளைசுந்தரம் ஆகியோர் வாழ்த்துரையாற்றினர்.

மத்திய கல்வி அமைச் சகத்தின் சமூகத் தொழில் முனைவோர் துறைத் தலை மை ஒருங்கிணைப்பாளர் பி.சரத்சந்திர நவீன்குமார் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டார்.

சிறு தொழில் தொடங்குவதற் கான வழிமுறைகள், திட்டங்கள், சந்தை விற்பனை சார்ந்த தொழி ல்கள், நிதி முதலீடுகள், குறைந்த செலவில் தொழில் தொடங்குவது, எலக்ட்ரானிக்ஸ் கழிவுப் பொருள் சார்ந்த தொழில்கள் உட் பட பல்வேறு விளக்கங்கள் அளிக் கப்பட்டன.

தேனி மேலப்பேட்டை இந்து நாடார்கள் உறவின்முறைத் தலை வர் கேபிஆர்.முருகன், பொதுச் செயலாளர் டி.ராஜ்மோகன், பொருளாளர் எம்.பழனியப்பன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

இதற்கான ஏற்பாடுகளை கல்லூரி துணை முதல்வர் என்.மா தவன், கல்லூரி பெண்கள் உரிமை அமைப்பு ஒருங்கிணைப்பாளர் ஆர்.சரண்யா ஆகியோர் செய் திருந்தனர்.

பேராசிரியர் கே.கணேஷ் நன்றி கூறினார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in