தூத்துக்குடியில் தொழில் திட்ட அறிக்கை தயாரித்தல் பயிற்சி

தூத்துக்குடியில் தொழில் திட்ட அறிக்கை தயாரித்தல் பயிற்சி
Updated on
1 min read

தூத்துக்குடி மாவட்ட சிறு தொழில் சங்க (துடிசியா) பொதுச்செயலாளர் ராஜ்செல்வின் வெளியிட்டுள்ள அறிக்கை: சென்னையில் உள்ள தமிழ்நாடு தொழில் முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனம், துடிசியா இணைந்து நடத்தும் தொழில் மாதிரி மற்றும் தொழில் திட்ட அறிக்கை தயாரித்தல் பயிற்சி தூத்துக்குடி மாவட்ட சிறு தொழில் சங்கம், 4/158, ராம் நகர் , எட்டையபுரம் ரோடு, தூத்துக்குடி-2 என்ற முகவரியில் பிப்ரவரி 25-ம் தேதி தொடங்குகிறது.

இப்பயிற்சியில் தொழிலின் வகைகள், தொழிலை தேர்ந்தெடுக்கும் முறைகள், அரசு மானியத்துடன் கூடிய வங்கிக்கடன் பெறும் வழிமுறைகள், தொழில் தொடங்க தேவையான அரசு பதிவுகள், வெற்றி பெற்ற தொழிலதிபர்கள் மற்றும் அரசு உயர் அதிகாரிகளிடம் நேரடியாக கலந்துரையாடல், நவீன தொழில் நுட்பங்கள் போன்றவை நடத்தப்பட உள்ளன.

18 வயது நிரம்பிய 8-ம் வகுப்பு முடித்த தொழில் ஆர்வம் உள்ள ஆண்- பெண் இருபாலரும் பயிற்சியில் சேரலாம். 03.03.2021 வரை 5 நாட்கள் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை பயிற்சி நடைபெறும். பயிற்சிக் கட்டணம் ரூ.700. முதலில் வரும் 30 நபர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள்.

பயிற்சியின் இறுதியில் வழங்கப்படும் சான்றிதழை பெற்றுக்கொண்டு அரசு திட்டங்களின் கீழ் ரூ.25 லட்சம் வரை 25 சதவீத மானியத்துடன் வங்கிக்கடன் பெற்று புதிதாக தொழில் தொடங்க வாய்ப்புள்ளது. பயிற்சி முன்பதிவுக்கு துடிசியா அலுவலகத்தை நேரிலோ அல்லது 9791423277, 9843878690 ஆகிய தொலைபேசி எண்களிலோ தொடர்பு கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in