உச்சநீதிமன்ற தீர்ப்பின் அடிப்படையில் அரசுடமையாக்கப்பட்டுள்ள திருவள்ளூர் மாவட்டம் ஊத்துக்கோட்டை வட்டம் வேளகாபுரம் கிராமத்தில் உள்ள சசிகலாவின் உறவினர்களான வி.என். சுதாகரன், ஜெ. இளவரசி ஆகியோருக்கு சொந்தமான  சொத்துகளை மாவட்ட ஆட்சியர் பொன்னையா பார்வையிட்டு, ஆய்வு செய்தார்.

திருவள்ளூர் மாவட்டத்தில் அரசுடமையான சுதாகரன், இளவரசியின் சொத்துகளை ஆட்சியர் ஆய்வு

Published on

திருவள்ளூர் மாவட்டத்தில் அரசுடமை ஆக்கப்பட்டுள்ள சசிகலாவின் உறவினர்களான வி.என். சுதாகரன், ஜெ. இளவரசி ஆகியோருக்கு சொந்தமான சொத்துகளை நேற்று மாவட்ட ஆட்சியர் பொன்னையா பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

உச்சநீதிமன்ற தீர்ப்பின் அடிப்படையில், சசிகலாவின் உறவினர்களான வி.என்.சுதாகரன், ஜெ.இளவரசி ஆகியோருக்கு சொந்தமாக திருவள்ளூர் மாவட்டம், ஊத்துக்கோட்டை வட்டம், வேளகாபுரம் கிராமத்தில் உள்ள 20.33 ஏக்கர் மற்றும் 20.89 ஏக்கர் என, 41.22 ஏக்கர் பரப்பளவிலான இரு சொத்துகளை கடந்த 10-ம் தேதி காஞ்சி மாவட்ட நிர்வாகம் பறிமுதல் செய்து, அரசுடமையாக்கியது.

இந்நிலையில், அரசுடமை ஆக்கப்பட்டுள்ள அவ்விரு சொத்துகளையும் நேற்று மாவட்ட ஆட்சியர் பொன்னையா நேரில் பார்வையிட்டு, ஆய்வு மேற்கொண்டார்.

இந்த ஆய்வின்போது ஊத்துக்கோட்டை வட்டாட்சியர் குமார் உள்ளிட்ட வருவாய்த் துறை அலுவலர்கள் உடனிருந்தனர்.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in