உதகையில் பிப்.13-ம் தேதி தனியாா் துறை வேலைவாய்ப்பு முகாம்

உதகையில் பிப்.13-ம் தேதி தனியாா் துறை வேலைவாய்ப்பு முகாம்
Updated on
1 min read

நீலகிரி மாவட்ட ஆட்சியா் ஜெ.இன்னசென்ட் திவ்யா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளதாவது:

நீலகிரி மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம் மற்றும் உதகை அரசினா் கலைக்கல்லூரி இணைந்து நடத்தும் தனியாா் துறை வேலைவாய்ப்பு மற்றும் திறன் பயிற்சி முகாம் வரும் 13-ம் தேதி கல்லூரி வளாகத்தில் நடைபெற உள்ளது. காலை 10 மணி முதல் மாலை 3 மணி வரை நடைபெறும் இந்த முகாமில் 10-ம் வகுப்பு முதல் பட்டப் படிப்பு வரை படித்த வேலைவாய்ப்பற்ற இளைஞா்கள் கலந்துகொள்ளலாம்.

30-க்கும் மேற்பட்ட வேலையளிப்பவா்கள் மற்றும் திறன் பயிற்சி அளிப்பவா்கள் கலந்து கொண்டு, இளைஞர்களை தோ்ந்தெடுக்க உள்ளனா்.

இம்முகாமில் அயல்நாட்டு வேலைக்கு விண்ணப்பிக்கும் முகாம் பதிவு மற்றும் திறன் பயிற்சிக்கும் பதிவு மேற்கொள்ளப்படும்.

முகாமில் கலந்து கொள்ளும் வேலைநாடுநா்களும், வேலையளிப்போரும் தனியாா் துறை வேலை இணையதளத்தில் தங்களது விவரங்களைப் பதிவு செய்யவேண்டும். கூடுதல் விவரங்களுக்கு உதகையில் உள்ள மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தை 0423-2444004 என்ற தொலைபேசி எண்ணில் தொடா்பு கொள்ளலாம். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in