வட்டாட்சியரின்ஜீப் ஓட்டுநர் கொலை

வட்டாட்சியரின்ஜீப் ஓட்டுநர் கொலை
Updated on
1 min read

வட்டாட்சியரின் ஜீப் ஓட்டுநர் கொலை செய்யப்பட்டார்.

விருதுநகர் அருகே ஆமத் தூரைச் சேர்ந்தவர் செல்வகுமார் (38). முன்னாள் ராணுவ வீரரான இவர் வட்டார வழங்கல் வட்டாட்சியரின் ஜீப் ஓட்டுநராக இருந்தார்.

இவர் நேற்று பிற்பகல் அப்பகுதியில் நடந்து சென்றபோது அதே பகுதியைச் சேர்ந்த லாரி ஓட்டுநர் பாலகிருஷ்ணன்(43) கத்தியால் குத்திவிட்டுத் தப்பினார். இதில் படுகாயமடைந்த செல்வகுமார், விருதுநகர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி இறந்தார்.

ஆமத்தூர் போலீஸார் பால கிருஷ்ணனைக் கைதுசெய்து விசாரித்ததில் அவரது அண்ணன் மகளை செல்வகுமார் கேலி செய்ததால் கொலை செய்ததாக தெரியவந்தது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in