சாலையோர மரத்தில் கார் மோதி ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் உயிரிழப்பு திண்டிவனம் அருகே கோர விபத்து

திண்டிவனம் அருகே மரத்தில் மோதி விபத்துக்குள்ளான கார்.
திண்டிவனம் அருகே மரத்தில் மோதி விபத்துக்குள்ளான கார்.
Updated on
1 min read

சேலம் மாவட்டம் பெத்தநாயக் கன்பாளையம் அருகேயுள்ள தலவாய்பட்டி கிராமத்தைச் சேர்ந் தவர் குருநாதன் (54), சென்னை ரயில்வே துறை ஊழியர். இவரது தம்பி செந்தில்நாதன்(50). சாப்ட்வேர் இன்ஜினியர்.

செந்தில்நாதன் மனைவி இந்துமதி (40), சென்னை சேப்பாக்கத்தில் வேளாண் அலுவலர். செந்தில்நாதன் மகன் முகில் (16) 11-ம் வகுப்பு மாணவர்.

குருநாதன், செந்தில்நாதன், இந்துமதி, முகில் ஆகிய 4 பேரும் சென்னை, மேடவாக்கம், விமலா நகரில் வசித்து வந்தனர்.

இவர்கள் அனைவரும் கள்ளக்குறிச்சியில் உறவினரின் திருமண நிகழ்ச்சியில் கலந்து கொள்ள நேற்று முன்தினம் காரில் சென்றுள்ளனர். நேற்று காலை ஒரே காரில் 4 பேரும் சென்னைக்கு திரும்பிக் கொண்டு இருந்தனர். காரை செந்தில்நாதன் ஓட்டிச் சென்றார். பிற்பகல் 12.30 மணி அளவில் திண்டிவனம் அருகில் உள்ள பாதிரி கிராமத்தை நெருங்கிய போது, அங்குள்ள சாலையோர மரத்தில் கார் மோதி விபத்துக்குள்ளானது. இவ்விபத்தில் குருநாதன், செந்தில்நாதன், இந்துமதி ஆகியோர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். படுகாயமடைந்த முகிலை ஆம்புலன்ஸ் மூலம் திண்டிவனம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

இதுகுறித்து ஒலக்கூர் காவல் நிலையத்தினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் விபத்தில் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in