திருவண்ணாமலையில் 13 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி நேற்று சாலை மறியலில் ஈடுபட்ட அரசு ஊழியர்கள். அடுத்த படம்: வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரே மறியலில் ஈடுபட்ட தமிழ்நாடு அரசு ஊழியர்  சங்கத்தினர்.
திருவண்ணாமலையில் 13 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி நேற்று சாலை மறியலில் ஈடுபட்ட அரசு ஊழியர்கள். அடுத்த படம்: வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரே மறியலில் ஈடுபட்ட தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தினர்.

தி.மலையில் 4-வது நாளாக சாலை மறியல் 120 அரசு ஊழியர்கள் கைது

Published on

திருவண்ணாமலையில் 4-வது நாளாக நேற்று நடைபெற்ற சிறை நிரப்பும் போராட்டத்தில் பங்கேற்ற 120 அரசு ஊழியர்கள் கைது செய்யப்பட்டனர்.

புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும். அரசுத் துறைகளில் உள்ள 4.5 லட்சம் பணியிடங்களை நிரப்ப வேண்டும். சாலை பணியாளர்களின் 41 மாத பணி நீக்க காலத்தைபணிக்காலமாக அறிவித்து ஊதியம் வழங்க வேண்டும் என்பனஉள்ளிட்ட 13 அம்ச கோரிக்கை களை வலியுறுத்தி தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் சார்பில் தி.மலையில் கடந்த 2-ம் தேதி முதல் தொடர் மறியல் மற்றும் சிறை நிரப்பும் போராட்டம் நடைபெற்று வருகிறது. 4-வது நாளாக நேற்று போராட்டம் நடைபெற்றது.

அண்ணா சிலை முன்பு சாலை மறியலில் ஈடுபட்ட 120 அரசு ஊழியர்களை, காவல்துறையினர் கைது செய்தனர். அப்போது அவர்கள், கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கமிட்டனர்.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in