

போலீஸார் தாக்கியதில் தந்தை, மகன் உயிரிழந்த வழக்கு தொடர்பாக சிபிஐ அதிகாரிகள் 10 பேர் அடங்கிய குழுவினர் நேற்று திடீரென சாத்தான்குளம் வந்து மீண்டும் காவல் நிலையம் மற்றும் அரசு மருத்துவமனையில் விசாரனை நடத்தினர்.
தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தில் கடந்த ஜூன் மாதம் பொது முடக்கத்தை மீறி கடையை திறந்து வைத்ததாக கூறி வியாபாரிகள் ஜெயராஜ், அவரது மகன் பென்னிக்ஸ் ஆகியோரை போலீஸார் விசாரணைக்கு அழைத்துச் சென்று தாக்கியதில் கோவில்பட்டி சிறையில் இருவரும் உயிரிழந்தனர். இது தொடர்பாக டெல்லி சிபிஐ அதிகாரிகள் கொலை வழக்கு பதிவு செய்து அப்போதைய இன்ஸ்பெக்டர் தர், எஸ்ஐகள் ரகுகணேஷ், பாலகிருஷ்ணன், பால்துரை உட்பட 10 போலீஸாரை கைது செய்தனர்.
விசாரணைக்கு பின்னர் குற்றப்பத்திரிகையை நீதிமன்றத்தில் அவர்கள் தாக்கல் செய்தனர். இவ்வழக்கு விசாரணை விரைவில் நடைபெறவுள்ள நிலையில், எஸ்ஐ பால்துரை கரோனா தொற்றால் மரணமடைந்தார். இந்நிலையில் சிபிஐ அதிகாரிகள் கடந்த 1-ம் தேதி பேய்க்குளத்தை சேர்ந்த ராஜசிங் என்பவரிடம் விசாரணை நடத்தினர். நேற்று 2 கார்களில் சிபிஐ அதிகாரிகள் 10 பேர் திடீரென சாத்தான்குளம் வந்தனர். அவர்களில் 5 பேர் சாத்தான்குளம் காவல் நிலையத்துக்கு சென்று விசாரணை மேற்கொண்டனர்.
இதுபோல் அரசு மருத்துவ மனைக்கு மற்ற 5 அதிகாரிகள் சென்று செவிலியர்கள் மற்றும் ஊழியர்களை வெளியேற்றி விட்டு அரசு மருத்துவரிடம் விசாரணை நடத்தினர். சுமார் இரண்டரை மணி நேரம் விசாரணை நடைபெற்றது.
சாத்தான்குளம் காவல்நிலை யத்தில் ஜெயராஜ், பென்னிக்ஸை அழைத்து போலீஸார் விசா ரணை நடத்தியபோது இருந்த ஆவணங்களையும், தங்களது கைவசம் வைத்துள்ள ஆவணங்களையும் சிபிஐ அதிகாரிகள் சரிபார்த்தனர். சிபிஐயின் இந்த திடீர் விசாரணை பரபரப்பை ஏற்படுத்தியது.
சாத்தான்குளம் காவல்நிலையத்தில் ஜெயராஜ், பென்னிக்ஸை அழைத்து போலீஸார் விசாரணை நடத்தியபோது இருந்த ஆவணங்களையும், தங்களது கைவசம் வைத்துள்ள ஆவணங்களையும் சிபிஐ அதிகாரிகள் சரிபார்த்தனர்.